This Article is From Apr 30, 2019

ஆய்வக உதவியாளர் காலிப் பணியிட அறிவிப்பை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.! - விவரம் உள்ளே!!

எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். எழுத்து தேர்வு ஜூன் 30-ம் தேதி நடைபெறுகிறது.

ஆய்வக உதவியாளர் காலிப் பணியிட அறிவிப்பை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.! - விவரம் உள்ளே!!

சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

New Delhi:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. ரிசர்ச் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 26 இடங்கள் காலியாக உள்ளன. 

வேலூர் ராணிப்பேட்டையில் உள்ள கால்நடை மருந்தக நிறுவனத்தில் பணி புரிவதற்காக இந்த காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் ஆன்லைனில் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதற்கு மே 29-ம்தேதி கடைசி நாள் ஆகும். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க... Apply Online

ஸ்டேட் வங்கியின் மூலம் பணத்தை மே 31-ம்தேதி வரைக்கும் செலுத்தலாம். ஆன்லைன் பதிவுக்கு ரூ. 150 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

எழுத்து தேர்வு ஜூன் 30-ம்தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை மற்றும் கோவை ஆகிய இடங்களில் எழுத்து தேர்வு நடைபெறுகிறது.  இதற்கு கால்நடை அறிவியலில் முதுகலைப் பட்டம் Masters in Veterinary Science (Micro-biology, Pathology, Parasitology, Dairy Micro-biology and Animal Biotechnology) பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிப்பவர்கள் உயர்நிலைப் பள்ளியில் தமிழை ஒரு பாடமாக எழுதி அதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

.