எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தகுதியுள்ளவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
New Delhi: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, 327 இஞ்சினியரிங் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கான விண்ணப்பம் இஸ்ரோவின் இணையதளமான https://www.isro.gov.in –ல் ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், விண்ணப்பிப்பதற்கு நவம்பர் 4-ம்தேதி கடைசி நாளாகஅறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் B.E/ B.Tech முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு நவம்பர்4-ம்தேதியை கணக்கிடும்போது 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
முன்னாள் ராணுவத்தினர், உடல்நல பாதிப்பால் ஓய்வூதியம் பெறுபவர் உள்ளிட்டோருக்கு வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தொகை ரூ. 100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத் தொகை செலுத்த நவம்பர்6-ம்தேதி கடைசி நாளாகும்.
எழுத்து மற்றும் நேர்முகம் என 2 தேர்வுகள் மூலமாக தகுதியுள்ள நபர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். எழுத்துத்தேர்வு 2020 ஜனவரி 12-ம்தேதி நடைபெறுகிறது. Objective Type முறையில் 80 கேள்விகள் தேர்வில் இடம்பெறும்.
எழுத்துதேர்வு மதிப்பெண் அடிப்படையில் நேர்முகத்தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவார்கள்.