This Article is From Sep 30, 2019

LIC Jobs : எல்.ஐ.சி.யில் 8 ஆயிரம் உதவியாளர் பணி! விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!

எல்.ஐ.சி.யில் உதவியாளர் பணிக்கு (LIC Assistant selection) முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam) அக்டோபர் 21-ம்தேதியும், 22-ம்தேதியும் நடைபெறும். ஹால் டிக்கெட்டுகள் அக்டோபர் 15-ம்தேதி ஆன்லைனில் வெளியாகும்.

LIC Jobs : எல்.ஐ.சி.யில் 8 ஆயிரம் உதவியாளர் பணி! விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!

உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்.

New Delhi:

எல்.ஐ.சி.யில் 8 ஆயிரம் உதவியாளர் பணியிடங்கள்  காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு 18-30.

அலுவலக பணியாளர்கள், காசாளர்கள், வாடிக்கையாளர் சேவையாளர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் இவற்றில் அடங்கும். 

பணிக்காக விண்ணப்பிப்போரில் SC/ ST/ OBC/ PwBD ஆகிய பிரிவை சேர்ந்தவர்களுக்கு எல்.ஐ.சி. தேர்வுக்கான கோச்சிங்கை வழங்குகிறது. 

விண்ணப்பித்தோருக்கு ஹால் டிக்கெட்டுகள் அக்டோபர் 15-ம்தேதி வழங்கப்படுகின்றன. முதல்நிலைத் தேர்வுகள் அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. 

SC/ ST/ OBC/ PwBD பிரிவைச் சேர்ந்தவர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ. 85 செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர் ரூ. 510-யை செலுத்த வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்க்கில் செல்லவும்... https://ibpsonline.ibps.in/licastaug19/  

.