TET: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
TET: ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல்தாள் முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியமான TRB மூலமாக டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வின் வாயிலாக தேர்வு செய்யப்படுகிறார்கள். தற்போது காலியாக உள்ள இடங்களை நிரப்ப கடந்த பிப்ரவரியில் அறிவிப்பு வெளியானது.
இதன்படி முதல்தாள் ஜூன் 8-ம்தேதியும், இரண்டாம் தாள் ஜூன் 9-ம்தேதியும் நடந்தன. இதில் முதல் தாளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
இதனை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளமான http://trb.tn.nic.in – ல் அறிந்து கொள்ளலாம்.