மொத்தம் 6 ஆயிரத்து 491 காலிப் பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.
New Delhi: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 எழுத்துத் தேர்வு செப்டம்பர் 1-ம்தேதி நடைபெறுகிறது. இதற்கான ஹால் டிக்கெட்டுகள் இந்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் 6 ஆயிரத்து 491 காலிப் பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. tnpsc.gov.in, tnpscexams.net அல்லது tnpscexams.in என்ற இணைய தளங்களில் ஹால் டிக்கெட்டுகளை டவுண்லோட் செய்து கொள்ள முடியும்.
தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியாகும். இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர் உள்ளிட்ட அரசுப்பணிகள் குரூப் 4 தேர்வின் கீழ் வருகின்றன.
கடந்த முறை நடைபெற்ற குரூப் 4 தேர்வினை மொத்தம் 9 ஆயிரத்து 351 பேர் எழுதினார்கள். இந்த முறை தேர்வுக்கான விண்ணப்பம் ஜூன் 14-ல் தொடங்கி ஜூலை 14-ம்தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் செப்டம்பர் 1-ம்தேதி ஒரே கட்டமாக எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது.
3 மணி நேரம் நடைபெறும் தேர்வு 300 மதிப்பெண்களை கொண்டது. இதில் தேர்ச்சி பெற குறைந்தது 90 மதிப்பெண்களாவது எடுக்க வேண்டும். பொதுத் தமிழ் அல்லது ஆங்கிலம், பொது அறிவு பாடப் பகுதிகளில் இருந்து மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும்.