Read in English
This Article is From Jul 13, 2019

ஐ.ஏ.எஸ்.. ஐ.பி.எஸ். முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு!!

சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு கடந்த ஜூன் 2-ம்தேதி நடத்தப்பட்டது. யு.பி.எஸ்.சி.-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான upsc.gov.in. -ல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisement
இந்தியா Edited by

3 கட்டங்களா சிவில் சர்வீஸ் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தகுதி பெற்றவர்கள் அடுத்த கட்டமாக விரிவான எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 28 பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளை மத்திய பணியாளர் தேர்வாணையமான UPSC (Union Public Service Commission) நடத்துகிறது. முதல்நிலை, மெய்ன் மற்றும் நேர்முகத் தேர்வு என 3 கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்பட்டு அதிகாரிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். 

UPSC Prelims result 2019: Check here

.

இந்த ஆண்டு கடந்த ஜூன் 2-ம்தேதி முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. இதனை நாடு முழுவதும் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதியுள்ளனர். இந்த நிலையில் முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதனை யு.பி.எஸ்.சி.-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான upsc.gov.in. -ல் பார்த்துக் கொள்ளலாம். 

இதில் தகுதி பெற்றவர்கள் எழுத்து தேர்வான மெய்ன் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள். எழுத்து தேர்வு தொடங்குவதற்கு 4 வாரங்களுக்கு முன்பாக அவர்களுக்கு ஹால் டிக்கெட் அனுப்பி வைக்கப்படும் என்று யு.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. 

Advertisement

நடப்பாண்டில் 896 காலிப் பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ப்ரீலிம்ஸ் எனப்படும் முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள்  Detailed Application Form-I or DAF-I  எனப்படும் விரிவான சுய விவர குறிப்புகளை அனுப்ப வேண்டும். இதற்கான பக்கம் upsconline.nic.in ல் ஆகஸ்ட் 1-ம்தேதி முதல் ஆகஸ்ட்  16-ம்தேதி வரை இருக்கும். 

  .  

Click here for more Jobs News
 

Advertisement
Advertisement