மூன்று நோயாளிகளுக்கு நிறுவனம் இழப்பீடு வழங்கியுள்ளது. (File Photo)
Lucknow: உத்தர பிரதேச மாநிலத்தில் தவறான மருந்து நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தில் இடுப்பில் இம்ப்ளான்ட் அறுவை சிகிச்சை செய்வதற்கான பொருளை தயாரித்து வந்தது. அதனை பொருத்தி வந்த நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதில் பாதிக்கப்பட்ட மூன்று பேருக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது.
உத்தர பிரதேச மருந்து உரிமம் மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரி ஏ.கே. ஜெயின் கூறுகையில் நிறுவனம் தயாரித்த பொருளைக் கொண்டு இம்ப்ளாண்ட் அறுவை சிகிச்சை செய்த மூன்று நோயாளிகளுக்கு நிறுவனம் இழப்பீடு வழங்கியுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றம் மே மாதம் ஜான்சன் மற்றும் ஜான்சனுக்கு அறுவை சிகிச்சை செய்த 67 நோயாளிகளுக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க உத்திரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற புகார்களை உத்திர பிரதேச மருந்து உரிமம் மற்றும் கட்டுபாட்டு ஆணையம் உடனடியாக பின்பற்றி வருவதாக ஜெயின் கூறினார்.