This Article is From Dec 24, 2018

"பாவம் அவரே கன்ஃப்யூஸ் ஆகிட்டாரு" ஜான்சனுக்கு பதில் சொன்ன பத்திரிக்கை!

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மிட்சல் ஜான்சன் இந்திய பத்திரிக்கை ஒன்றில் வெளியான தனது பேட்டியை முழுமையாக மறுத்துள்ளார்.

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மிட்சல் ஜான்சன் இந்திய பத்திரிக்கை ஒன்றில் வெளியான தனது பேட்டியை முழுமையாக மறுத்துள்ளார். அந்தப் பேட்டியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராஹ்வை பாராட்டி செய்தி இடம் பெற்றிருந்தது.

மிட்சல் ஜான்சன் சர்வதேச போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். பின்னர் கிரிக்கெட் தொடர்களில் வர்ணனையாளராக மாறியுள்ளார்.

முன்னதாக ஐசிசியும் இந்தப் பேட்டியை பிரசுரித்திருந்தது. அதனை ஐசிசி தனது பக்கத்தில் ட்விட் செய்ய அதனை கவனித்த ஜான்சன் '' இது எப்போது எடுக்கப்பட்டது. நான் இப்படி ஒரு பேட்டியை கொடுக்கவே இல்லையே'' என்று ட்விட் செய்துள்ளார்.

இந்தப் பேட்டியில் '' பும்ராஹ் எப்போதாவது தான் தவறான பந்துகளை வீசுவார். அவர் பந்தை ஆடுவதற்கு முன் இரண்டுமுறை பேட்ஸ்மேன் யோசிக்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது. அதற்கு பதில் தெரிவித்துள்ள ஜான்சன் இதனை நான் சொல்லவில்லை. ஆனால் இது உண்மைதான் என்று கூறியுள்ளார்.

ஜான்சன் தனது அடுத்த ட்விட்டில் இந்திய பத்திரிக்கையான டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியாகியுள்ள கட்டுரையை பகிர்ந்து நான் மெல்பெர்னிலேயே இல்லை. இது எப்படி மெல்பெர்னில் எடுக்கப்பட்டிருக்கும் என்று கூறி ட்விட் செய்துள்ளார். மேலும் இது குறித்து இன்னும் டைம்ஸ் ஆஃப் இந்தியா எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

.