Mumbai: பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீடியோ எடுத்ததற்காக தன்னுடைய போனை பறித்துக் கொண்டதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அசோக் ஷியாமிலல் பாண்டே என்ற பத்திரிகையாளர் புகார் அளித்திருந்தார். புகாரில் தானும் தன்னுடைய கேமராமேனும் ஜுகுவிலிருந்து கண்டிவேலிக்கு சென்று கொண்டிருந்தபோது சல்மான்கான் சைக்கிளில் ரைடிங்க் சென்று கொண்டிருந்தார். அப்போது சல்மான்கான் பாதுகாவலரிடம் வீடியோ எடுக்கலாமா என்று அனுமதி கேட்டோம். பாதுகாவலர் ஒப்புதல் அளித்த பின்பே எங்கள் செல்போனில் வீடியோ எடுத்தோம்.
ஆனால், நாங்கள் வீடியோ எடுப்பதை பார்த்த சல்மான் கான் எங்கள் போனை பறித்துக் கொண்டார். நாங்கள் பத்திரிகையாளர்கள் என்று சொன்னபின்பும் ‘அது விஷயம் இல்லை' என்று கூறி எங்கள் போனை பறிமுதல் செய்து விட்டார் என்று தெரிவித்தார்.
பத்திரிகையாளர் அவசர போலீஸ்க்கு அழைப்பு விடுத்த போது, சல்மான் கானின் பாதுகாவலர்கள் போனை திருப்பி கொடுத்துள்ளனர்.
சல்மான் கானின் பாதுகாவலர்கள் முன் அனுமதியின்றி வீடியோ எடுத்தததாகக் கூறி காவல்துறையில் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.