எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சவுத்திரி மீது பத்திரிகையாளர் ஜெயின் வழக்கு தொடுத்திருந்தார்
New Delhi: இந்தி நாளிதழில் பணிபுரியும் பத்திரிகையாளர் சக்ரேஷ் ஜெயின் புதன்கிழமை மத்திய பிரதேசத்தின் சாகரில் 90 சதவீத தீக்காயங்களுடன் இறந்துவிட்டார்.
இறந்தவரின் சகோதரர் அரசு அதிகாரி மீது குற்றம் சாட்டியுள்ளார். அதிகாரி அமன் சவுத்திரிக்கும் பத்திரிகையாளர் சக்ரேஷ் ஜெயின் ஆகியோருக்கு இடையே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மோதல் இருந்தது குறிப்பிடத்தக்கது. எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சவுத்திரி மீது பத்திரிகையாளர் ஜெயின் வழக்கு தொடுத்திருந்தார். வழக்கும் முடியும் தருவாயில் உள்ள நிலையில் இந்த கொலை முயற்சியை சம்பவம் நடந்துள்ளது. குற்றச்சாட்டுகளை மறுத்த சவுத்ரி பத்திரிகையாளார் சக்ரேஷ் செயின் வீட்டிற்கு வந்து தீ வைத்து கொண்டதாக கூறினார். 30 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சவுத்ரி சிகிச்சை பெற்று வருகிறார்.
மூத்த காவல்துறை அதிகாரி அமித் சங்கி NDTVயிடம் தெரிவித்த போது, சவுத்ரி மாஜிஸ்திரேட் முன் அளித்த அறிக்கையில் செயின் காலை 8 மணியளவில் வீட்டை அடைந்ததாக கூறினார். ஜெயின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததாக தெரிகிறது.
கிட்டத்தட்ட 5 மணிநேரம் கழித்து சகோதரர் ராஜ்குமார் ஜெயின் பார்த்து சகோதரரை மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவர் இறந்து விட்டதாக அறிவித்தனர். இரண்டு சம்பவங்களும் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் பிரிவு எண் 174 கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
தடவியல் நிபுணர்களின் குழுக்கள் இரு இடங்களிலிருந்தும் மாதிரிகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றன. ஆனால் சகோதரர் ராஜ்குமார் தன் சகோதரனை இருவர் சேர்ந்து கொன்றுள்ளனர் என்றும் அதில் அமன் சவுத்ரியும் ஒருவர் என்று தெரிவித்துள்ளார்.
தன் சகோதரர் மருத்துவமனை கொண்டு சென்ற பொழுது உயிருடன் இருந்தார் என்றும் அங்கு இறந்த போது அவரின் மரணம் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.