This Article is From Nov 19, 2018

"சவுதி பத்திரிகையாளர் கஷோக்கியின் உடலை கொலைகாரர்களே எடுத்து சென்றுவிட்டனரா? "

அக்டோபர் 2-ம் தேதி இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அமீரகத்துக்கு சென்ற கஷோக்கி மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். இவர் சவுதி மன்னரை பற்றி விமர்சித்து செய்தி வெளியிட்டதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

கஷோக்கியை எந்தவித பிரச்னையுமின்றி சவுதி செல்ல சொன்னதாகவும், கேட்க மறுத்ததால் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

ANKARA:

சவுதி பத்திரிகையாளர் கஷோக்கி கொலையில் அடுத்தகட்ட தகவல்கள் அதிர்ச்சிகரமானதாக உள்ளன. துருக்கி அமைச்சர் ஹுலுசி அக்கர் தெரிவித்துள்ள கருத்தில் கசோக்கியின் உடலை கொலை செய்தவர்கள் வெட்டி எடுத்து சென்றதாக கூறப்பட்டுள்ளது.

அக்டோபர் 2-ம் தேதி இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அமீரகத்துக்கு சென்ற கஷோக்கி மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். இவர் சவுதி மன்னரை பற்றி விமர்சித்து செய்தி வெளியிட்டதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

சவுதியிலிருந்து 15 பேர் கொண்ட குழு அரசு விமானம் மூலம் அக்டோபரில் இஸ்தான்புல் அமீரகத்துக்கு சென்றுள்ளது. அவர்கள் கஷோக்கியை கொலை செய்யும் நோக்கத்தில் தான் இஸ்தான்புல் வந்ததாக கூறப்படுகிறது. அவர்களோடு பிரேதத்தை சுத்தப்படுத்தும் இருவரும் வந்ததாக கூறப்படுகிறது.

இந்த கொலையில் பலவிதமான செய்திகள் வெளிவந்துள்ளன. கஷோக்கியை எந்தவித பிரச்னையுமின்றி சவுதி செல்ல சொன்னதாகவும், கேட்க மறுத்ததால் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி கஷோக்கி கொலை செய்யப்பட்ட நான்கு அல்லது ஐந்து மணி நேரத்துக்குள் கஷோக்கியின் உடல் வெட்டப்பட்ட நிலையில் துருக்கியை விட்டு வெளியேற்றப்பட்டதாக அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொலை செய்தவர்கள் கஷோக்கியின் உடலை ஆசிட்டில் கரைத்துவிட்டார்களா என்ற விசாரணையும் நடந்து வருகிறது. துருக்கி அதிகாரிகள் பெரும் சர்வதேச அழுத்தத்தில் உள்ளனர்.முகமது பின் சல்மான் மன்னரின் குறுக்கீடு இருப்பதால் அவர்களின் செலாவணி ரியாத்தின் மதிப்பும் வீழ்ந்துள்ளது.

அமெரிக்கா இந்த விஷயத்தை எளிதில் விட மாட்டோம். குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என கூறிவரும் வேளையில் இந்தச் செயலை அமெரிக்க அதிபர் டரம்ப் சிறுபிள்ளை தனமானது என விமர்சித்துள்ளார்.

"துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தத் தகவல்களில் நம்பகத்தன்மை சரியானதாக இல்லை; விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.

.