हिंदी में पढ़ें Read in English
This Article is From Jun 23, 2019

டெல்லியில் பெண் பத்திரிகையாளர் மீது துப்பாக்கி சூடு

பத்திரிகையாளர் மிதாலி சந்தோலா காருக்குள் இருந்தபோதுசில முகமூடி அணிந்தவர்கள் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

Advertisement
இந்தியா Edited by (with inputs from ANI)

பத்திரிக்கையாளர் தர்மசீலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

New Delhi:

டெல்லியில் பெண் பத்திரிகையாளர் ஒருவரை முகமூடி அணிந்த குழுவினர் துப்பாக்கியால் சுட்டனர். நொய்டா பகுதியில் வசித்து வந்தவர் ஹீண்டாய் காரை ஓட்டி வந்துகொண்டிருந்த போது இரவு 12.30 மணியளவில் இந்த துப்பாக்கி சூடு நடந்துள்ளது. 

பத்திரிகையாளர் மிதாலி சந்தோலா காருக்குள் இருந்தபோதுசில முகமூடி அணிந்தவர்கள்  இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். காரின் கண்ணாடியில் முட்டையையும் வீசியுள்ளனர்.  இரவில் வாகன ஓட்டிகளை திசை திருப்பி கொள்ளையடிக்கும் கும்பல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதா என்று விசாரணை நடத்தி வருகிறது. பத்திரிக்கையாளர் தர்மசீலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளார்.
 

தோள்பட்டையில் துப்பாக்கி குண்டு தாக்கியுள்ளது. பத்திரிகையாளர் மிதாலிக்கு தன் குடும்பத்தினருடன் சுமூகமான உறவில் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது. துப்பாக்கி சூடு குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

2008 ஆம் ஆண்டில் 26-வயது செளமியா விஸ்வநாதன் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். 

Advertisement