ஐஐஎம்சி மும்பை பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர் என்று கூறப்படுகிறது.
Lucknow: உத்தரபிரதேச முதல்வர் ஆதித்யநாத் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டதாக லக்னோவில் பத்திரிகையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர், முதல்வர் அலுவலகத்திற்கு வெளியே நின்று கொண்டிருக்கும் ஒரு பெண் அங்கு கூடியுள்ள செய்தியாளர்களிடம் தான் முதல்வரை திருமணம் செய்துகொள்ளும் விருப்பத்தை அவருக்கு அனுப்பியுள்ளதாக கூறும் காட்சி வீடியோவை ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கிலும் பிரசாத் கனோஜியா வெளியிட்டுள்ளார்.
நேற்று இரவு வெளியிடப்பட்ட இந்த வீடியோ முதலமைச்சரின் பெயருக்கு கலங்கம் விளைவிப்பதாக பத்திரிகையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்ப்பட்டுள்ளார்.
இவர் மீது ஹஸ்ராத்கஞ்ச் காவல்நிலைய உதவி ஆய்வாளர் எப்ஐஆர் பதிவு செய்துள்ளார். கனோஜ்யாவின் ட்விட்டர் அவருக்கு சொந்தமானதுதானா என சரிபார்க்கப்பட்டது. இவர் ஐஐஎம்சி மும்பை பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர் என்று கூறப்படுகிறது. மேலும் இவருக்கு சில ஊடகங்களின் தொடர்புகள் உள்ளதும் தெரியவந்துள்ளது.