Read in English
This Article is From Sep 11, 2020

இந்து எதிர்ப்பு அரசாங்கத்தினை தூக்கியெறிவோம்: மம்தா அரசை கடுமையாக விமர்சித்த ஜே.பி. நட்டா!

மம்தா அரசின் இந்த மனநிலை குறித்து மக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டும் என்றும், தற்போது மேற்கு வங்கத்தில் பாஜகவின் வாக்கு விகிதம் அதிகரித்து வருகின்றது. இது கூடுதலாக அதிகரிக்கும் பட்சத்தில் மம்தா அரசு தூக்கியெறியப்படும். என கூறியுள்ளார்.

Advertisement
இந்தியா Posted by (with inputs from PTI)

அடுத்த ஆண்டு மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள தேர்தலையொட்டி அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

Kolkata:

மேற்கு வங்க மம்தா பானர்ஜி அரசு இந்துக்களுக்கு எதிரான அரசு என பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தற்போது குற்றம் சாட்டியுள்ளார்.

அடுத்த ஆண்டு மேற்கு வங்கத்தில் நடைபெற இருக்கும் தேர்தலையொட்டி அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தற்போதைய மம்தா அரசானது இந்து எதிர்ப்பு மனநிலையை கொண்டுள்ளது என்றும், மேற்கு வங்கத்தினை மைய நீரோட்டத்துடன் இணைக்க முடியவில்லை என்றும் நட்டா கடும் விமர்சனத்தினை முன்வைத்துள்ளார்.

மேலும், மம்தா அரசானது கொரோனா ஊரடங்கினை ராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழா நாளான ஆகஸ்ட் 5 அன்று மாநிலத்தில் அமல்படுத்தியது. ஆனால், ஊரடங்கில் தளர்வுகளை ஜூலை 31 ஈகை திருநாளன்று அறிவித்துள்ளது. இதிலிருந்து மம்தா அரசின் இந்து எதிர்ப்பு மனநிலையை நாம் புரிந்துகொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார்.

மேலும், மம்தா அரசின் இந்த மனநிலை குறித்து மக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டும் என்றும், தற்போது மேற்கு வங்கத்தில் பாஜகவின் வாக்கு விகிதம் அதிகரித்து வருகின்றது. இது கூடுதலாக அதிகரிக்கும் பட்சத்தில் மம்தா அரசு தூக்கியெறியப்படும். என கூறியுள்ளார்.

 மத்திய அரசின் முதன்மை சுகாதாரத் திட்டமான ஆயுஷ்மான் பாரதத் திட்டத்திற்கு மேற்கு வங்கம் போதுமான ஒத்துழைப்பு வழங்காமல் இருந்ததன் காரணமாக விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் வழங்கும் 6,000 ரூபாய் மானியத்தினை பெரும் வாய்ப்பினை மம்தா அரசு இழந்துவிட்டது என்றும் நட்டா விமர்சித்துள்ளார்.

Advertisement

 தகுதியான விவசாயிகளின் பட்டியலை வங்க அரசு இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்று நட்டா கூறியுள்ளார்.

நட்டாவின் குற்றச்சாட்டுகளுக்கு விரிவான மறுப்பு தெரிவிக்கும் வகையில், ஓ'பிரையன் சுகாதார காப்பீடு மற்றும் விவசாயிகளின் நலனுக்கான அரசு நடத்தும் திட்டங்களை சுட்டிக்காட்டினார். குறிப்பாக கோவிட் தொற்றுநோய்களின் போது, ​​உணவுப் பொருட்கள் மிகவும் தேவைப்படுபவர்களை எட்டவில்லை என்ற கூற்றுகளையும் அவர் மறுத்தார்.

Advertisement

அடுத்த ஆண்டு மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள தேர்தலையொட்டி அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

With input from PTI

Advertisement