New Delhi: உச்ச நீதிமன்ற நீதிபதியாக இரண்டாவது முறையாக கொலீஜீயத்தின் பரிந்துரையை ஏற்று, மத்திய அரசால் அறிவிக்கப்பட்டார் நீதிபதி கே.எம்.ஜோசப். இவர் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, வினீத் சரண் ஆகிய நீதிபதிகளுக்கு அடுத்தபடியாக நியமிக்கப்பட்டு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கு பல உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
முதலில் ஜனவரி மாதம், கே.எம்.ஜோசப்பை கொலீஜியம் பரிந்துரைத்தது. அப்போது அந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்கவில்லை. இரண்டாவது முறையாக மீண்டும் அவர் பரிந்துரைக்கப்பட்டதால் தான் ஏற்றுக் கொள்ளப்பட்டார்.
அவருக்கு பிறகே நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் வினித் சரணின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டனர். ஆனால் நீதிபதிகளை நியமித்து வெளியிட்ட அறிக்கையில், நீதிபதி ஜோசப்பின் பெயர் மூன்றாவது இடத்தில் கொடுக்கப்பட்டிருந்தது. முதலில் அவர் பெயர் தான் இருந்திருக்க வேண்டும் என்கின்றனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள். மத்திய அரசின் பாரபட்சத்தினால் கடும் அதிருப்தியில் உள்ளனர். இது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை சந்தித்து பேசு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
2016-ம் ஆண்டு உத்தரகாண்டில், குடியரசு தலைவர் ஆட்சியை ரத்து செய்து தீர்ப்பளித்தார் நீதிபதி ஜோசப். இதனால், காங்கிரஸ் ஆட்சி அங்கு நீடித்தது. இதை மனதில் வைத்து தான் மத்திய அரசு அவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஏற்றுக் கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சிகள் முன்னர் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தேர்வு செய்யப்பட்ட நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, வினித் சரண் மற்றும் கே.எம்.ஜோசப் ஆகியோர் செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்க உள்ளனர்.