Read in English
This Article is From Aug 04, 2018

இந்திரா பானர்ஜி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு; புதிய சாதனை!

கொலிஜியம், ஒரு நீதிபதியின் பெயரை இரண்டு முறை மத்திய அரசுக்கு பரிந்துரைத்தால், மத்திய அரசு, அதனை ஏற்றாக வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது

Advertisement
இந்தியா Posted by
New Delhi:

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் இந்திரா பானர்ஜி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தற்போது அவருடன் சேர்த்து மூன்று பெண் நீதிபதிகள் இருப்பர். இது ஒரு தனித்துவமான சாதனையாக பார்க்கப்படுகிறது.

‘உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப், ஒரிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வினீர் சரன் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படு வருகிறது’ என்று சட்டத்துறை அமைச்சகம் நேற்று தகவல் தெரிவித்தது.

இந்நிலையில் இந்திரா பானர்ஜிதான் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெறும் 8 வது நீதிபதி ஆவார். அதேபோல இந்து மலோத்ரா மற்றும் ஆர்.பானுமதி என்ற இரு பெண் நீதிபதிகள் இருக்கும் நிலையில், மூன்றாவதாக ஒரு பெண் நீதிபதி நியமிக்கப்படுவதும் இதுவே முதல் முறையாகும். 

Advertisement

ஒரு வழக்கறிஞராக தனது பயணத்தை ஆரம்பித்த பானர்ஜி, 2002 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். கடந்த ஆண்டு அவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆனார். இந்நிலையில் அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஆக உள்ளார். 

கடந்த மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜஸ்டி செலமேஷ்வர், பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதையொட்டி, கே.எம். ஜோசப்பின் பெயரை உச்ச நீதிமன்ற கொலிஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது. அவரின் பெயரை மறு பரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு, கொலிஜியத்துக்கு சொல்லிவிட்டது. தற்போது அவரது பெயரை இரண்டாவது முறையாக கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

Advertisement

கொலிஜியம், ஒரு நீதிபதியின் பெயரை இரண்டு முறை மத்திய அரசுக்கு பரிந்துரைத்தால், மத்திய அரசு, அதனை ஏற்றாக வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதியாக தகுதியடைவர்களை கொலிஜியம் பரிந்துரைத்தால் அதை மத்திய அரசு மறுக்கும் சம்பவம் எப்போதாவது தான் நடக்கும். 

இந்நிலையில் நீதிபதி ஜோசப்பின் பெயரை மத்திய அரசு திரும்ப அனுப்பியதற்கு வேறு காரணம் இருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. அதாவது, கடந்த 2016 ஆம் ஆண்டு உத்தரகாண்டில் அமலாகியிருந்த ஜனாதிபதி ஆட்சிக்கு எதிராக ஜோசப் தீர்ப்பளித்தார். இது காங்கிரஸ், அரசு அமைக்க ஏதுவாக ஆனது. அதனால்தான் நீதிபதி ஜோசப்பின் பெயரை மத்திய அரசு திரும்ப அனுப்பியது என்று குற்றம் சாட்டின எதிர்கட்சிகள். இதை சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மறுத்துள்ளார். 

Advertisement