ஹைலைட்ஸ்
- நீதி தாமதப்படுத்தப்படுவது சரியில்லை, ஆஷா தேவி
- சீக்கிரமே அனைத்து குற்றவாளிகளும் தூக்கிலடப்பட வேண்டும், ஆஷா தேவி
- 3 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு வழக்கை விசாரித்து தீர்ப்பளித்துள்ளது
New Delhi: 2012-ம் ஆண்டு டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த மருத்துவ மாணவி நிர்பயா வழக்கில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். இந்நிலையில் ஈர்ப்பு குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார் நிர்பயாவின் தாய் ஆஷா தேவி.
நிர்பயா வழக்கில் கைது செய்யப்பட்ட முகேஷ், பவன் குப்தா, வினய் ஷர்மா ஆகியோர், தங்களுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற இன்று தீர்ப்பை வழங்கியது. அதில், குற்றவாளிகள் பாலியல் பலாத்காரத்திலும், கொடுமைபடுத்தும் செயல்களிலும் ஈடுபட்டது உறுதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகையால், அவர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட மரண தண்டனையில் எந்த மாற்றமும் செய்ய விரும்பவில்லை என்று 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு தெரிவித்துள்ளது.
இந்தத் தீர்ப்பு குறித்து நிர்பயாவின் தாய் தேவி, ‘இது அனைவருக்கும் கிடைத்த நீதி. ஆனால், போராட்டம் இங்கு முடிவடையப் போவதில்லை. தொடர்ந்து நீதி தாமதமாகிக் கொண்டே போகிறது. இது சமூகத்தில் இருக்கும் மற்ற பெண்களை பாதிக்கிறது. நீதித் துறையிடம் அவர்களின் சட்டத்தை இன்னும் கடுமையானதாக ஆக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க விரும்புகிறேன். சீக்கிரமே குற்றவாளிகளின் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். கண்டிப்பாக குற்றவாளிகள் மேல்முறையீடு செய்தாலும் அவர்களின் மனு நிராகரிக்கப்படும். ஆனால், ஏற்கெனவே இந்த விஷயத்தில் ஏகப்பட்ட காலம் கடந்துவிட்டது. இந்த காலத்தில் பெண்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களும் அதிகரித்துவிட்டன. சீக்கிரமாக அவர்கள் தூக்கிலபட்டடால் தான் நல்லது’ என்று ஆதங்கமாக பேசியுள்ளார்.
கடந்த ஆண்டு டெல்லி நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனை உத்தரவை, உச்ச நீதிமன்ற உறுதி செய்திருந்த நிலையில், குற்றவாளிகள் இரண்டாவது முறையாக மேல் முறையீடு செய்திருந்தனர். தூக்குத் தண்டனை பெற்ற 4 பேரில் மூன்று பேர் மட்டுமே மேல் முறையீடு செய்தனர். நான்காவது குற்றவாளியான அக்ஷய் குமார், மேல் முறையீடு செய்யவில்லை.
தூக்குத் தண்டனையில் இருந்து விடுபட, இன்னும் ஒரே ஒரு முறை மட்டுமே மேல் முறையீடு செய்யும் வாய்ப்பு உள்ளது. அதற்கு பின் குடியரசு தலைவரிடம் பொது மன்னிப்பு கோரி மனு செய்வதே கடைசி வாய்ப்பு. அதிலும் நிராகரிக்கப்பட்டால், தூக்குத் தண்டனை கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.
டிசம்பர் 16, 2012 ஆம் ஆண்டு, ஓடும் பேருந்தில் பாலியல் பலாதகாரம் செய்யப்பட்டு, படுகாயங்களுடன் 16 நாட்கள் போராடி உயிரிழந்தார் மருத்துவ மாணவி நிர்பயா. அந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பெண்களுக்கு எதிரான வன்முறையை எதிர்த்து போராடும் விதமாக, அந்தக் கல்லூரி, மாணவிக்கு நிர்பயா (அச்சமற்றவள்) என்று பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.