Read in English
This Article is From Jul 03, 2018

தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு: மறுப்பு தெரிவித்தார் கனடா பிரதமர்

அன்றைய தினம் கிரெஸ்டண்டினில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்பது நினைவில் உள்ளது. ஆனால், இது போன்ற கசப்பான சம்பவம் நடைப்பெற்றதாக எனக்கு நினைவில்லை

Advertisement
உலகம் (c) 2018 The Washington PostPosted by

கனடாவில் நடைப்பெற்ற இரும்பு மற்றும் அலுமினியம் துறை பணியாளர்கள் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர்களின் கேள்விகளை எதிர்கொண்டார்.

18 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டிஷ் கொலம்பியாவில் நடைப்பெற்ற இசை திருவிழாவில், இளம் பெண்ணிடம் தாகத முறையில் நடந்து கொண்டதாக பிரதமர் ட்ரூடோ மீது எழுந்த குற்றச்சாட்டு பற்றி பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த பிரதமர் ட்ரூடோ, “அன்றைய தினம் கிரெஸ்டண்டினில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்பது நினைவில் உள்ளது. ஆனால், இது போன்ற கசப்பான சம்பவம் நடைப்பெற்றதாக எனக்கு நினைவில்லை” என்று கூறினார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு கிரெஸ்சண்ட் வாலி அட்வான்ஸ் என்ற கம்யூனிட்டி நாளிதழில் இந்த சம்பவம் குறித்து முதலில் தகவல்கள் வெளியானது. கையெழுத்திடப்படாத தலையங்க கட்டுரையில், ஆசிரியராக பணிபுரிந்து வந்த ட்ரூடோ, தனது 28 வயதில் கொக்கானி சம்மிட் திருவிழாவின் போது பெண் பத்திரிக்கையாளரிடம் கண்டிக்கும் விதத்தில் நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டியது.

இந்த சம்பவம் குறித்து வேறு தகவல்கள் எதுவும் கட்டுரையில் எழுதப்படவில்லை. எனினும், “நான் அவமதிக்கப்பட்டேன்” என பாதிக்கப்பட்ட பெண் கருதுவதாக செய்தி வெளியிட்டிருந்தது. மேலும், சம்பவம் நடைப்பெற்ற ஒரு தினத்திற்கு பிறகு, ட்ரூடோ மன்னிப்பு கோரியதாகவும் தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட பெண் பத்திரிக்கையாளரின் விவரங்கள் வெளிவரவில்லை. ட்ரூடோவை தொடர்ந்து விமர்சித்து வரும் வாரென் கின்செல்ல என்பவர், ஜூன் 6 ஆம் தேதி அன்று, 2000 ஆம் ஆண்டு வெளிவந்த செய்தியின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதனால், இந்த செய்தி மீண்டும் ஊடகங்களின் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்த குற்றச்சாட்டு கனடா பிரதமரின் நற்பெயருக்கு கலங்கம் விளைவித்துள்ளது. லிபரல் கட்சியை சேர்ந்த ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த 2014 ஆம் ஆண்டு பெண் உறுப்பினர்களுக்கு தொல்லை கொடுத்த இரண்டு ஆண்களை பாராளுமன்றத்தில் இருந்து நீக்கினார். 2017 ஆம் ஆண்டு, பணி இடங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை கண்காணிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது.

ட்ரூடோ மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த போது, பிரதமர் அலுவலக செய்தி தொடர்பாளர் மாட், “முன்பு பிரதமர் கூறியது போலவே, அனைவரையும் மரியாதையுடன் கவனிக்கும் பழக்கம் கொண்டவர். க்ரெஸெண்டில் அவர் இருந்த அந்த தினத்தில் இது போன்ற நிகழ்ச்சி நடக்கவில்லை என்பது உறுதி” என்று கூறினார்.


 



(हेडलाइन के अलावा, इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है, यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
Advertisement