This Article is From Jun 11, 2018

'புற முதுகில் குத்திவிட்டார் ட்ரூட்..!'- ஜி7 மாநாடு குறித்து கொதிக்கும் அமெரிக்கா

அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்ற ஜி7 மாநாடு கனடாவில் நடந்தது

'புற முதுகில் குத்திவிட்டார் ட்ரூட்..!'- ஜி7 மாநாடு குறித்து கொதிக்கும் அமெரிக்கா

கனடா- அமெரிக்கா மோதல் உலகத் தலைவர்களை கவலை கொல்லச் செய்துள்ளது

ஹைலைட்ஸ்

  • ஜி7 மாநாடு கனடாவில் நடந்தது
  • இந்த மாநாட்டில் ட்ரூடுக்கும் ட்ரம்ப்புக்கும் கருத்து மோதல் ஆனது
  • இதனால், ட்ரம்ப் பாதியிலேயே கிளம்பவிட்டார்
Washington:

அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்ற ஜி7 மாநாடு கனடாவில் நடந்தது. இரண்டு நாட்கள் நடந்த இந்த மாநாட்டில் நேற்று கூட்டறிக்கை விடப்பட்டது. ஆனால், இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் ஒரு பெரும் அரசியல் களேபரமே நடந்து முடிந்தது. குறிப்பாக, கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கும் இடையில் நடந்த கருத்துப் போர் உலக அரசியல் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினியம் ஆகியவற்றுக்கு விதிக்கப்படும் வரியில் மாற்றம் செய்தது அமெரிக்க அரசு. இந்த வரி அதிகரிப்பை திரும்ப பெற வலியுறுத்தி கனட பிரதமர் ட்ரூட், ட்ரம்ப்க்கு போன் மூலம் வலியுறுத்தினார். அப்போது, `நாஃப்டா ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முடிவுக்கு நீங்கள் சம்மதித்தால் இந்த புதிய வரி விதிப்பு ரத்து செய்யப்படும்' என்று ட்ரம்ப் பதில் கூறினார். இதையடுத்து, இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் தொடர்ந்து மோதல் போக்கு அதிகரித்தது. இந்நிலையில், ஜி7 மாநாட்டிலும் ட்ரூட் இதே கோரிக்கையை அனைத்து நாட்டுத் தலைவர்கள் முன்னிலையிலும் ட்ரம்ப்பிடம் வலியுறுத்தியிருப்பார் என்று கூறப்படுகிறது. 

 
justin trudeau pov g7 summit twitter


இதனால் கோபம் கொண்ட் ட்ரம்ப் மாநாட்டின் பாதியிலேயே கிளம்பிவிட்டார். `ட்ரூட் அமெரிக்கா குறித்து தவறான கருத்துகளை தெரிவித்துள்ளார். ஆனால் கனடா, அமெரிக்காவின் விவசாயிகள், நிறுவனங்கள் மீது விதிக்கும் அதீத வரி விதிப்பு பற்றி எதையும் பேசவில்லை. இதனால், அமெரிக்க அதிகாரிகளுக்கு ஜி7 மாநாட்டில் சொல்லப்படும் விஷயங்களுக்கு சம்மதம் தெரிவிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளேன்' என்று கடுகடுத்துள்ளார். ட்ரூட்டின் எந்த கருத்து, ட்ரம்ப்பை இப்படி பேச வைத்தது என்பது தெரியவில்லை. ஆனால், ஜி7 மாநாட்டில் அமெரிக்கா ஒத்துழைப்பு கொடுக்காது என்பது தெரிந்தது.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜஸ்டின் ட்ரூட், `கனடர்களான நாங்கள் மிகவும் மரியாதையாகவும் கண்ணியத்துடனும் நடந்து கொள்வோம். ஆனால், எதற்கெடுத்தாலும் தலையாட்டும் வழக்கம் எங்களுக்கு இல்லை. எங்கள் அலுமினியம் மற்றும் ஸ்டீல் நிறுவனங்களுக்கு அமெரிக்க விதித்த வரி என்பதை நானும் எங்கள் நாட்டு மக்களும் சாதரணமாக எடுத்துக் கொள்ளவில்லை என்று ட்ரம்ப்பிடம் தெளிவாக எடுத்துக் கூறினோம். உலக அளவில் நடந்த முக்கியமான விவகாரங்களில் அமெரிக்காவுடன் தோலோடு தோல் நின்ற எங்களை இது அவமதிக்கும் செயல்' என்று கொதிப்புடன் பேசினார்.

ஜி7 மாநாட்டில் ட்ரம்ப் பேசியபோது, `ரஷ்யாவை நாம் ஜி7 குழுவில் மீண்டும் இணைக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார். இந்தக் கோரிக்கைக்கு கனடா எதிர்ப்பு தெரிவித்தது. இது குறித்து எந்த ஓட்டெடுப்பும் நடக்கவில்லை. கடந்த 2014 ஆம் ஆண்டு, க்ரிமியா விஷயத்தில் ரஷ்யாவின் செயல்பாட்டுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஜி7 குழவிலிருந்து வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், மீண்டும் ரஷ்யாவை ஜி7 குழுவில் சேர்க்க வேண்டும் என்று ட்ரம்ப் கூறியுள்ளது கவனம் பெற்றுள்ளது. 

ட்ரம்ப் மேலும், ஜி7 குழுவில் இருக்கும் நாடுகளுக்கு மத்தியில் வர்த்தகத்தை வளர்க்கும் விதத்தில், வியாபாரத்துக்கு விதிக்கப்பட்டிருக்கும் அனைத்து வரி விதிப்புகளையும் எல்லா நாடுகளும் கைவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இப்படி பல்வேறு சம்பவங்களுக்கு அடுத்து, இறுதியாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் கூட்டறிக்கை வெளியிடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். வழக்கம் போல அந்த கூட்டறிக்கையில், `உலக வர்த்தக மையத்தில் சர்வதேச அளவில் வியாபாரம் செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை தளர்த்துவதற்கு ஜி7 மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுக்கும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த அதிகாரிகள், `ட்ரூட் அமெரிக்காவுக்கு எதிராக வேண்டுமென்றே நிலைப்பாடு எடுத்துப் பேசினார். அவர் எங்கள் புற முதுகில் குத்திவிட்டார்' என்று கொதிப்படைந்துள்ளனர். ட்ரம்ப்பின் அணுகமுறைக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் வருத்தம் தெரிவித்துள்ளார். 

.