This Article is From Jun 12, 2018

வைரலான கனடா பிரதமரின் புருவங்கள்: என்ன அது #Eyebrowgate ஹாஷ்டேக்

சமீபத்தில் ஜஸ்டின் டிரூடே  பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றுக்கு வந்திருந்த போது அவரது புருவங்களை சீரற்று கோணலாக இருந்தது

வைரலான கனடா பிரதமரின் புருவங்கள்: என்ன அது #Eyebrowgate ஹாஷ்டேக்

பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு வந்த போதுதான் ட்ரூடேவின் புருவங்கள் சிக்கிக் கொண்டது.

ஹைலைட்ஸ்

  • ட்விட்டரில் வைரலானது #Eyebrowgate ஹாஷ்டேக்
  • பத்திரிக்கையாளர் சந்திப்பில் ட்ரூடோவின் புருவங்கள் சீரற்று இருந்தன
  • ட்ரூடோவின் புருவங்கள் போலி என ட்வீட்டத் தொடங்கினர்
New Delhi:
புதிடில்லி: WWE மல்யுத்தப் விளையாட்டில், ஒரு புருவத்தை மட்டும் உயர்த்தி கோபத்தை வெளிப்படுதும் தி ராக்கின் புருவங்கள் மற்றும் “ஒரு அதார் லவ்” திரைப்படத்தில் இளைஞர்களின் நெஞ்சை சுட்டு ஓட்டையாக்கிய பிரியா பிரகாஷ் வாரியரின் புருவங்களுக்கு பின் ஒருவரின் புருவம் உலகம் முழுவதும் ட்ரெண்டாகி இருக்கிறது என்றால் அது, கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடேவின் புருவங்கள் தான்.

சமீபத்தில் ஜஸ்டின் டிரூடே  பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றுக்கு வந்திருந்த போது அவரது புருவங்களை சீரற்று கோணலாக இருந்தது. இதை கண்ணில் எண்ணெய் விட்டுக் கண்டு பிடித்த நெட்டிசன்கள் “ட்ரூடேவின் புருவங்கள் போலி, அதை அவர் செட்டப் செய்திருக்கிறார்” என்று ட்வீட்ட ஆரம்பித்தனர்.

ட்வீட்கள் ஏவுகணைகளாக வந்து விழ ட்விட்டரில் வைரலானது #Eyebrowgate ஹாஷ்டேக்.

  
“டிரம்ப்பை சந்தித்த பின்னர், ஜஸ்டின் ட்ருடோவின் புருவங்கள் விழுந்துவிட்டன? இந்த காலத்தில், போலி புருவங்களை வைத்து கொள்ளாமல் யாரு இருக்கிறார்?” என்று இதுப்போன்ற பல கருத்துக்கள் பகிரப்பட்டன.



 
கடந்த ஞாயிற்றுகிழமை அன்று, ஜி7 பொருளாதார மாநாட்டில், அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்கு இடையேயான வரி விதிப்பு தொடர்பாக ட்ரூடே மற்றும் டிரம்பும், கடுமையான கருத்துக்களை வெளியிட்டனர். இது குறித்து, பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு வந்த போதுதான் ட்ரூடேவின் புருவங்கள் சிக்கிக் கொண்டது.
 
.