This Article is From Mar 10, 2020

நெருக்கடியில் ம.பி. அரசு: 20 எம்எல்ஏக்களுடன் ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா!!

முன்னதாக 25 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யத் தயாராக உள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன. தொடர்ந்து, மத்தியப் பிரதேச ராஜ்பவன் வட்டாரங்கள் அளித்த தகவல்படி, ஏற்கனவே 14 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர்.

ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் பதவி ராஜினாமா செய்யலாம் என்று தெரிகிறது.

ஹைலைட்ஸ்

  • மோடியுடன் ஜோதிராதித்ய இன்று காலை சந்திப்பு
  • சிந்திய இன்று பாஜகவில் இணைவார் என்று தெரிகிறது.
  • 20 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் அளிக்க தயாராக உள்ளனர்.
Bhopal:

மத்திய உள்துறை அமித் ஷாவுடன் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்த ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். தொடர்ந்து, அவர் இன்று அல்லது வரும் சனிக்கிழமை பாஜகவில் இணைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஜோதிராதித்ய சிந்தியாவின் ராஜினாமாவை தொடர்ந்து, 20 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் சபாநாயகருக்கு ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வர் திக் விஜயசிங் கூறும்போது, இந்த சர்ச்சை உருவானது முதல் நாங்கள் ஜோதிராதித்ய சிந்தியாவை தொடர்புகொள்ள முயன்றோம், ஆனால் அவருக்குப் பன்றிக்காய்ச்சல் எனத் தகவல் தெரிவித்தனர். அதனால், அவருடன் பேசமுடியவில்லை என்றார். 

மத்தியப் பிரதேச அரசியலில் பெரும் திருப்பமாகக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் 17 பேர் தனி விமானத்தில் பாஜக ஆளும் மாநிலமான பெங்களூருவுக்கு சென்றுவிட்டனர். 

மத்தியப் பிரதேச சட்டமன்றத்தில் மொத்தம் 230 உறுப்பினர்கள். ஒரு கட்சி ஆட்சியமைக்க 116 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. இந்த நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 120 எம்எல்ஏக்கள் ஆதரவாக உள்ளனர். அவர்களில் 114 பேர் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள். இருவர் பகுஜன் சமாஜையும், ஒருவர் சமாஜ்வாதி கட்சியையும், 4 பேர் சுயேச்சை எம்எல்ஏக்ளும் ஆவார்கள். பாஜகவுக்கு 107 எம்எல்ஏக்கள் உள்ளனர். 2 சட்டமன்ற உறுப்பினர் பதவி காலியாக உள்ளது. 

தொடர்ந்து, 17 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்வதாக அறிவித்தால், கர்நாடகாவை தொடர்ந்து, காங்கிரஸ் தனது இரண்டாவது மாநிலத்தை இழக்கும் நிலை ஏற்படும்.

.