"2ஜி ஊழல் வழக்கில் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டவர் அ. ராசா" -எடப்பாடி பழனிசாமி
Nilgiris: திமுக மீதான ஊழல் பிரச்னையான 2ஜி ஸ்பெக்ட் ரம் ஊழல் மேல் முறையீடு நிலுவையில் உள்ளது அதற்கான தண்டனையை அவர்கள் பெறுவார்கள் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி கூறியுள்ளார்.
லோக் சபா தேர்தலில் நீலகிரி தொகுதியில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் தியாகராஜனுக்காக ஓட்டு சேகரித்தபோது 2ஜி ஊழல் குறித்து பேசினார். இந்த் தொகுதியில் திமுக சார்பாக அ. ராசா போட்டியிடுகிறார். 2ஜி ஸ்பெக்ட் ரம் ஒதுக்கீட்டு முறைகேடு தொடர்பாக “அ. ராசா திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக” தெரிவித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீது ஊழல் பிரச்னையை மீண்டும் எழுப்பியுள்ளார்.
டிசம்பர் 2017 ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் சிபிஐயினால் போதுமான சாட்சியம் கொடுக்க முடியவில்லை என்று அறிவித்து 2 ஜி ஊழல் திமுக எம்.பி அ. ராசா, கனிமொழி ஆகியோரை விடுவித்தது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி “2ஜி ஊழல் தீர்ப்புக்கு எதிராக சிபிஐ மீண்டும் மேல் முறையீடு செய்யவுள்ளது. திமுக தண்டனை பெறுவது உறுதி, அதை நீங்களே நன்றாக அறிவீர்கள்” என்று கூறினார்.
மேலும் “ நீலகிரியில் 2009 அன்று நடந்த நிலச்சரிவுகளில் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட போது நிவாரண நடவடிக்கைகளாக ராஜா என்ன மேற்கொண்டார் என்று கேள்வியையும் எழுப்பினார்”
மக்களை சந்திக்காதவர்களுக்கு தேர்தல் மூலம் பாடம் கற்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதிமுக பாதிக்கப்பட்டவர்களுக்கு 450 வீடுகளை கட்டியதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.