Chennai: சென்னை: சேலம்- சென்னை எட்டு வழிச்சாலை அமைவதினால் ஆளும் கட்சிக்கு தனிப்பட்ட முறையில் ‘கமிஷன்’ கிடைக்கும் என்ற கருத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சமீபத்தில் நடைப்பெற்ற பொது கூட்டத்தில் திமுக கட்சியின் துரைமுருகன், எட்டு வழிச்சாலை அமைத்தால் மாநில அரசுக்கு தனி 'கமிஷன்' கிடைக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
துரைமுருகனின் கருத்தை மறுத்த முதலமைச்சர், இந்த திட்டத்தினால் பொது மக்கள் நன்மையடைவர் என்று கூறினார்.
மேலும், 10,000 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இந்த திட்டத்தினால், சேலம் - சென்னை வழியில் 60 கிலோமீட்டர் தூரத்தை குறைக்கவும், எரிவாயு சேமிக்கவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
எட்டு வழிச்சாலை திட்டம் மத்திய அரசின் ‘பரத்மாலா பரியோஜனா’ திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது என்றார். இந்த திட்டத்தினால் மும்பை-பூனா , டில்லி-ஆக்ரா வழி சாலைகளை போன்று சேலம்-சென்னை வழியும் மேம்படுவதால் மாநில அரசு ஆதரிக்கிறது என தெரிவித்தார்.
இந்த திட்டத்தினால் விவசாய நிலங்கள் பாதிப்படைவது குறித்து எந்த கருத்தும் வெளியிடப்படவில்லை
எனினும், திமுக சார்பில் வெளியிட்ட கருத்தில், எட்டு வழிச்சாலையை
எதிர்க்கவில்லை, ஆனால் ஆலோசித்து விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கூறியது.