பயிற்சியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.
Bengaluru: இந்திய விளையாட்டு ஆணையத்தின் கபடி பயிற்சியாளர் மீது, பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அவர் பெங்களூருவில் தங்கியிருந்த
ஹோட்டல் அறையில் தற்கொலை செய்துள்ளார் என போலீசார் கூறியுள்ளனர்.
ருத்ராப்பா வி கோசாமணி (59) பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் மூத்த பயிற்சியாளர் ஆவார். இவர் மீது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக
குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று பெங்களூருவில், ஹரிகரா பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த ருத்ரப்பா அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து, தாவனாகிரி போலீஸ் கண்காணிப்பாளர் ஆர்.சேத்தன் பிடிஐ-க்கு அளித்த பேட்டியில்,
அக்.13ஆம் தேதி கோசாமணி ஹோட்டல் அறைக்கு வந்துள்ளார். அதன் பிறகு அவர் வெளியே வராததால் கோட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள்.
தகவலறிந்து ஹோட்டலுக்கு வந்த போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கே அவர் தூக்கில் தொங்கியபடி இருந்தார்.
அக்.9 ஆம் தேதி பெண்களின் உடைமாற்று அறையில் இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சிறுமி பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியதும், இந்திய விளையாட்டு ஆணையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதன் பிறகு கோசாமணி விசாரித்த அதிகாரிகள் அவரை இடை நீக்கம் செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதவி செய்யப்பட்டது.