Read in English
This Article is From Jan 01, 2019

பிரபல ஹிந்தி நடிகர் காதர் கான், 81 வயதில் காலமானார்

நோயால் நெடுநாள் பாதிக்கப்பட்டிருந்ததாக தகவல்.

Advertisement
இந்தியா

புகழ்பெற்ற நடிகர் மற்றும் எழுத்தாளர் காதர் கான் உடல்நில குறைவால் தனது 81 வயதில் காலமானார்.

கடந்த 31 ஆம் தேதி அவரது உயிர் பிரிந்தாகவும் அவரது மகன் சராஃவாஸ் உறுதிபடுத்தியுள்ளனர். கனடா நாட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது இறுதி சடங்குகள் அங்கு நடக்கவுள்ளது என தகவல் வெளியாகிவுள்ளது.

‘என் தந்நை எங்களை விட்டு பிரிந்து விட்டார். கனடாவின் நேரத்தின்படி டிசம்பர் 31 ஆம் தேதி மாலை 6 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது. சுமார் 16-17 வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நாங்கள் நன்றிகடன் பட்டிருக்கிறோம்' என அவரது மகன் சராஃவாஸ்  தெரிவித்தார்

1980-90 களில் தனது நடிப்பாலும், வசனத்தாலும் உச்சத்தில் இருந்த நடிகர் காதர் கான், சுவாசிப்பதற்க்கு சிரம்பபட்டதாகவும் அதனால் பிஐபாப் வென்டிலேட்டர்க்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் அவர் பிராகர்சிவ் சூப்ராநியுகிளியர் பால்ஸி என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியானது.

காபுலில் பிறந்த நடிகர் காதர் கான், 1973-ல் வெளியான ‘தாக்' என்னும் படத்தில் ராஜேஷ் கன்னாவுடன் அறிமுகமானார். மேலும் அவர் 250 திரைப்படங்களுக்கு வசன எழுதியுள்ளதாகவும், சுமார் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தரம் வீர், கங்கா ஜமுனா ஸரஸ்வதி, கூலி, அமர் அக்பர் அந்தோனி போன்ற பல படங்களில் நடித்திருப்பது குறிப்படத்தக்கது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement