Lucknow: குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பேசியதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உத்தரப் பிரதேச மருத்துவர் கபீல் கானை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று நீதிமன்றம் இன்று கூறியுள்ளது.
கடந்த ஆண்டு அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேசியதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கபீல் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அவர் கடந்த ஜனவரி 29 அன்று கைது செய்யப்பட்டார். தற்போது அவர் சிறையில் உள்ள நிலையில், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று நீதிமன்றம் இன்று கூறியுள்ளது. மேலும், அவருடைய பேச்சு கலவரத்தினை உருவாக்குவதற்கான எவ்வித முகாந்தரத்தையும் கொண்டிருக்கவில்லையென்றும், தற்போது அவர் சிறையில் வைக்கப்பட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 19 அன்று பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையின்படி, கபீல் கான், அமையான சூழலை மாற்றும் விதத்திலும், மத நல்லிணக்த்தை உடைக்கும் விதத்திலும் அவர் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.