This Article is From May 27, 2020

‘கலைஞர் நம்ப வேண்டாம் என்று சொன்ன அரசியல்வாதி…’- பரபரப்பை ஏற்படுத்திய ராமதாஸ்!!

மொத்தத்தில் தன் கேள்விக்கு விடை கொடுக்காமல் யூகத்திற்கே ராமதாஸ் விட்டுள்ளார்

Advertisement
தமிழ்நாடு Written by

"ஒரு மூத்த அரசியல்வாதியின் பெயரைக் குறிப்பிட்ட கலைஞர், அவரை மட்டும் எந்தக் காலத்திலும் நம்பி விடாதீர்கள் என்று கூறினார்"

Highlights

  • ட்வட்டரில் பூடகமான பதிவை இட்டுள்ளார் ராமதாஸ்
  • அவரது பதிவிற்கு பல பின்னூட்டங்கள் வந்துள்ளன
  • அதைத் தொடர்ந்து இன்னொருப் பதிவை இட்டுள்ளார் ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று ஒரு பதிவை இட்டிருந்தார். அந்தப் பதிவு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அவர், ‘திமுக தலைவர் கலைஞரும், நானும் அவரது இல்லத்தில் ஒரு நாள் தனியாக உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு மூத்த அரசியல்வாதியின் பெயரைக் குறிப்பிட்ட கலைஞர், அவரை மட்டும் எந்தக் காலத்திலும் நம்பி விடாதீர்கள் என்று கூறினார். அவர் யார் என்பதை உங்களின் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்.' என்று கேள்வியெழுப்பும் வகையில் ட்வீட்டியிருந்தார் ராமதாஸ். 

இதற்குப் பலரும் கமென்ட் பகுதியில் பல தலைவர்களின் பெயர்களை பதிலாக தெரிவித்திருந்தனர். இதையடுத்து இன்று ராமதாஸ், ‘இந்த பதிவுக்கான பின்னூட்டத்தில் பலரும் பல தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால், கலைஞர் குறிப்பிட்டது அதிமுக, திமுக, திக, மதிமுக, தேமுதிக, பாஜ௧, காங்கிரஸ், பொதுவுடைமை இயக்கங்கள், விசிக, ஆகிய கட்சிகளின் தலைவர்கள் பெயர்களையோ, மறைந்த தலைவர்களின் பெயர்களையோ அல்ல!' என்று கூறி இன்னொரு ட்விஸ்ட் வைத்துள்ளார். 

மொத்தத்தில் தன் கேள்விக்கு விடை கொடுக்காமல் யூகத்திற்கே ராமதாஸ் விட்டுள்ளார். அவரின் கேள்விக்கு நெட்டிசன்களும் பல்வேறு பதில்களை தெரிவித்து வருகிறார்கள். 
 

Advertisement
Advertisement