This Article is From Jun 17, 2018

மகன் வீட்டுக்கு திடீர் விசிட் கொடுத்த தி.மு.க தலைவர் கருணாநிதி

உடல நலத்தில் முன்னேற்றம் கண்டு வரும் மு.கருணாநிதி அவ்வப்போது முரசொலி அலுவலகம், அண்ணா அறிவாலையம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருகிறார்

மகன் வீட்டுக்கு திடீர் விசிட் கொடுத்த தி.மு.க தலைவர் கருணாநிதி

ஹைலைட்ஸ்

  • சிகிச்சையில் கருணாநிதியின் உடல் நலத்தில் சிறு முன்னேற்றம்
  • அவ்வப்போது அறிவாலயம், முரசொலி அலுவலகம் செல்கிறார்
  • நேற்று மு..க தமிழரசு வீட்டுக்கு திடீர் விசிட் கொடுத்தார்

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி உடல் நலக் குறைவால் ஓய்வில் இருந்தார். தற்போது உடல நலத்தில் முன்னேற்றம் கண்டு வரும் மு.கருணாநிதி நேற்று கோடம்பாக்கத்தில் உள்ள தனது மகன் மு.க தமிழரசு இல்லத்திற்கு சென்று வந்துள்ளார்.

தற்போது பொது அரசியலில் இருந்து விலகி இருக்கும் கருணாநிதி, சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவ்வப்போது உடல் நிலையில் சிறிய முன்னேற்றங்கள் ஏற்படும்போது, முரசொலி அலுவலகம், அண்ணா அறிவாலையம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருவார். அந்த வகையில் தான் தனது மகன் தமிழரசு வீட்டுக்கு சென்றிருக்கிறார், என்று கூறப்படுகிறது. மு.க.தமிழரசு, நடிகர் அருள்நிதியின் தந்தை ஆவார்.

சமீப காலங்களில் பல அரசியல் கட்சி தலைவர்களும், திமுக தொண்டர்களும் கோபாலபுரம் இல்லதுக்கு சென்று நலம் விசாரிக்க அனுமதிக்கப்படுகின்றனர். ஜூன் மாதம் 3 ஆம் தேதி திமுக தலைவரின் 95 வது பிறந்தநாளை தி.மு.க தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.