This Article is From Jul 29, 2019

கலைப்புலி S தாணு வெளியிடும் பிரம்மாண்ட படைப்பு "குருக்ஷேத்ரம்"

குருக்ஷேத்ர போரினை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட பிரமாண்ட படம் 'குருக்ஷேத்ரம்'

கலைப்புலி S தாணு வெளியிடும் பிரம்மாண்ட படைப்பு

ஹைலைட்ஸ்

  • 3டி தொழில்நுட்பத்தில் இப்படம் வெளியாக இருக்கிறது
  • கர்ணன் கதாபாத்திரத்தில் அர்ஜுன் இப்படத்தில் நடித்துள்ளார்
  • தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது

மாபெரும் இதிகாச கதைகளில் ஒன்று மஹாபாரதம்.  கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் உறவினர்களுக்கிடையேயான குருக்ஷேத்ரா  போராட்டத்தை விவரிக்கும், இந்த கதையில் குருக்ஷேத்ர போரினை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட பிரமாண்ட படம் 'குருக்ஷேத்ரம்'.

உலகளவில் 3D முறையில் உருவாகியுள்ள இந்த படத்தை விருஷபாத்ரி புரொடக்ஷன் அளிக்கும், வி கிரியேஷன்ஸ் கலைப்புலி S தாணு  வழங்கும் பிரம்மாண்ட  படைப்பு இந்தப் படம். தமிழ் , தெலுங்கு , ஹிந்தி ,  கன்னடம் , மலையாளம் என ஐந்து மொழிகளில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நாகன்னா இயக்கியிருக்கும் இந்த படம் உருவாக முக்கிய காரணமாக இருந்தவர்கள் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள்.  இந்தப் படத்தில் பீஷ்மராக அம்பிரிஷ்,  துரியோதனன் ஆக தர்ஷன்,

கர்ணனாக ஆக அர்ஜுன்  சார்ஜா, பீஷ்மர் ஆக அம்பரீஷ், கிருஷ்ணனாக வி. ரவிச்சந்தர்,அர்ஜுனனாக சோனு சூட்.சகுனியாக ரவி ஷங்கர், சையியாக ராக்லைன் வெங்கடேஷ், திரௌபதியாக ஸ்நேகா  என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில்  நடித்துள்ளார்கள் . இந்த மாபெரும் திரைப்படத்திற்கு ஹரி கிருஷ்ணா இசையமைத்துள்ளார்.

ஐெய் வின்சென்ட் ஒளிப்பதிவும், ஜோ. நி.  ஹர்ஷா எடிட்டிங்கும் கையாண்டுள்ளனர்.பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை  முனி ரத்னா எழுதி தயாரித்துள்ளார். வருகிற ஆகஸ்ட் மாதம் இந்தப் படம் திரையிட திட்டமிட்டுள்ளனர்.

.