This Article is From Jul 09, 2018

மும்பையில் கன மழை - பேருந்து டயரில் சிக்கிய பெண் சம்பவ இடத்திலேயே பலி

மும்பையில் பலத்த மழை பெய்து வருவதால், ஆங்காங்கே சாலைகளில் நீர் தேங்கியுள்ளது

ஹைலைட்ஸ்

  • கன மழையால் மும்பையின் சாலைகளில் நீர் தேங்கியுள்ளது
  • இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது
  • சாலையில் விழுந்த பெண் மீது பேருந்து ஏறியதால், சம்பவ இடத்திலேயே பலியானார்
Mumbai:

மும்பை: மும்பையில், சாலையில் விழுந்த பெண்ணின் மீது பேருந்து ஏறிய காட்சிகள் சி.சி.டி.வி-யில் பதிவாகியுள்ளன.

மும்பையில் பலத்த மழை பெய்து வருவதால், ஆங்காங்கே சாலைகளில் நீர் தேங்கியுள்ளது. நேற்று மாலை, கல்யாண் பகுதியை சேர்ந்த மனிஷா போயர் என்ற பெண், உறவுக்காரருடன் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சிவாஜி சவுக் பகுதியில், இரு சக்கர வாகனம் வந்துக் கொண்டிருந்த போது, பள்ளத்தில் மோதியது. இதனால் நிலை தடுமாறிய மனிஷா பைக்கில் இருந்து சாலையில் விழுந்தார். அந்த வழியே வந்த பேருந்தின் பின் சக்கரத்தில் மனிஷா சிக்கினார். உறவினரும், அக்கம் பக்கத்தினரும் அவரை பிடித்து இழுத்து காப்பாற்ற முயன்றனர், ஆனால் அதற்குள் சம்பவ இடத்திலேயே மனீஷாவின் உயிர் பிரிந்தது. விபத்தின் போது, அவர் மீது பேருந்து ஏறும் காட்சிகள் சி.சி.டி.வி-யில் பதிவாகியுள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு முதல், மும்பையில் உள்ள 14 பகுதியில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது என மும்பை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சாலைகளில் நீர் தேங்கியுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம், மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள நகரங்களை ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் சேர்த்து பணிகளை மேற்கொள்வதற்கு முன், பள்ளமற்ற தரமான சாலைகளை போட வேண்டும் என மும்பை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது குறிப்பிடத் தக்கது.

.