This Article is From Jun 20, 2018

'சுற்றுச்சூழல் பற்றி பேசினாலே குற்றமா..?'- கமல் காட்டம்

சேலம் - சென்னை 8 வழிச் சாலை திட்டம் குறித்து கருத்து கூறி வரும் சமூக ஆர்வலர்களை தமிழக அரசு தொடர்ச்சியாக கைது செய்து வருகிறது

'சுற்றுச்சூழல் பற்றி பேசினாலே குற்றமா..?'- கமல் காட்டம்

ஹைலைட்ஸ்

  • சேலம்-சென்னை சாலை குறித்து பேசிய மன்சூர் அலிகான் முன்னர் கைதானார்
  • பியூஸ் மனுஷ் சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார்
  • சேலம் - சென்னை நெடுஞ்சாலைக்கு விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது
சேலம் - சென்னை 8 வழிச் சாலை திட்டம் குறித்து கருத்து கூறி வரும் சமூக ஆர்வலர்களை தமிழக அரசு தொடர்ச்சியாக கைது செய்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து பேசியுள்ளார் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன்.

சேலம் - சென்னை 8 வழிச்சாலை சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக சுமார் 270 கி.மீ தொலைவில் அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்கான நிலம் கையப்படுத்தும் பணி அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், விவசாயிகள் மத்தியிலும் சூழலியல் ஆர்வலர்கள் மத்தியிலும் இந்தத் திட்டத்துக்கு எதிராக குரல் எழுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, இத்திட்டத்தால் 2,000 ஏக்கர் விலை நிலங்கள் முற்றிலும் அழிந்துவிடும் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு எதிராக பேசிய நடிகர் மன்சூர் அலிகான், கைது செய்யப்பட்ட நிலையில் செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல் இது குறித்து பேசியுள்ளார். ‘சுற்றுச்சூழல் குறித்து யார் பேசினாலும் அதைக் குற்றம் போல் பாவிப்பது ஏற்புடையதல்ல. இது பற்றி கவலை எல்லோருக்கும் இருக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.



(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
.