சென்னை : மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சென்னை வந்துள்ள ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை ( Naveen Patnaik) சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், “நவீன் பட்நாயக் கொண்டு வந்த திட்டங்கள் பல இந்தியாவிற்கே முன்னோடி திட்டங்கள். மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு சில அறிவுரைகளை பெற்றுக் கொண்டேன்” என்றார்.
மேலும், ஆதார் குறித்த கேள்விக்கு, “மக்களுக்கு அரசு செய்யும் நல்ல திட்டங்கள் அனைத்துமே போற்றுதலுக்குரியது. ஆனால், தனி மனித உரிமைகளை பாதிக்கும் வகையில் மக்களை நோட்டமிடுவது சரியல்ல. எப்போதுமே கண்காணிக்கும் அரசாக இருக்க கூடாது.” என்று தெரிவித்தார்
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)