This Article is From Nov 16, 2018

கஜா புயல் நிவாரண பணி : தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த கமல்ஹாசன்

மாவட்ட ஆட்சியர்களின் அயராத பணி போற்றத்தக்கது என்று மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கஜா புயல் நிவாரண பணி : தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த கமல்ஹாசன்

தமிழகத்தை கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று காலையில் கரையைக் கடந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக உயிரிழப்புகள் அதிகமாக ஏற்படவில்லை. இதையடுத்து, தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இந்த விவகாரத்தில் தமிழக அரசை பாராட்டியுள்ளார். இந்த நிலையில் மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கஜா புயல் நிவாரண பணிகள் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

 

 

 

அவர் தனது ட்விட்டர் பதிவில், அரசு அதிகாரிகள்,காவல் துறை அதிகாரிகள், ஊடகங்கள் தன்னார்வலர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.கட்சி அடையாளத்தைத் தவிர்த்து, பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் சேவை செய்துகொண்டிருக்கும் @maiamofficial களவீரர்கள் தொடர்ந்து தொண்டாற்றிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இதற்கு முன் நாம் கடந்து வந்த பேரிடர் காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு, தற்பொழுது கஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி. பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களின் அயராத பணி போற்றத்தக்கது.

இவ்வாறு கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.