This Article is From Aug 08, 2018

எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் அண்ணாவின் தம்பியை அவரருகில் கிடத்தியிருப்பார் - கமல் ட்வீட்

மறைந்த கருணாநிதியின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்வதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்து விட்டது

எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் அண்ணாவின் தம்பியை அவரருகில் கிடத்தியிருப்பார் - கமல் ட்வீட்

ஹைலைட்ஸ்

  • நேற்று மாலை கருணாநிதி சிகிச்சை பலனின்றி காலமானார்
  • இன்று கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
  • தமிழக அரசின் மறுப்புக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

கடந்த சில நாட்களாகவே தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னையிலுள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று (ஆகஸ்ட் 7-ஆம் தேதி) மாலை கருணாநிதி சிகிச்சை பலனின்றி காலமானார். இன்று சென்னையிலுள்ள ராஜாஜி ஹாலுக்கு நேரில் சென்று அரசியல் கட்சித் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மறைந்த கருணாநிதியின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்வதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்து விட்டது. தமிழக அரசின் மறுப்புக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது, இது குறித்து நடிகரும், ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 

pic.twitter.com/PELLYfvYHv

— Kamal Haasan (@ikamalhaasan) August 7, 2018


அதில் அவர் கூறியதாவது “அண்ணா இருந்தபோது கழகம் காத்திட வளர்த்த இரு தம்பிகள் கலைஞரும், எம்.ஜி.ஆரும். அவர்கள் மூவரையும் ஒரே இடத்தில் வைத்து மரியாதை செய்வதே மாண்பு. எம்.ஜி.ஆருக்குப் பிறகு கட்சியில் சேர்ந்த கடைக்குட்டிகளுக்கு மாண்பு இல்லாதது சோகமே. எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால், கண்டிப்பாய் அண்ணாவின் தம்பியை அவரருகில் கிடத்தியிருப்பார்” என்று கமல் தெரிவித்துள்ளார்.

.