Read in English
This Article is From Mar 15, 2019

பொள்ளாச்சி விவகாரம்: என்ன நடவடிக்கை எடுக்க போறீங்க மிஸ்டர் சி.எம்? கமல்’நறுக்’ கேள்வி

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், முதல்வர் எடப்பாடி பழினிசாமியை கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Advertisement
இந்தியா Reported by , Edited by

பொள்ளாச்சி விவகாரத்தில் அமைதி காக்கும் அதிமுக அரசை கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Chennai:

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய விவகாரத்தில், ஆளும் அதிமுக அரசின் மூத்த தலைவர்கள் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் மெளனம் காத்து வருவது ஏன் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், ஜெயலலிதாவின் புகைப்படத்தை சட்டையில் வைத்திருக்கும் நீங்கள் பெண்களின் பாதுகாப்பிற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளுடன் முகநூல் வழியாக நண்பர்களாக பழகி அவர்களை வெளியே அழைத்து சென்று ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அதனை வீடியோவாகவும் எடுத்து அதனை காட்டி அந்த மாணவிகளை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளது ஒரு கும்பல். இதனை கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக அந்த கும்பல் செய்து வருவதாக கூறப்படுகிறது. எனினும் பாதிக்கப்பட்ட எந்த பெண்களும் புகார் தெரிவிக்காததால் தொடர்ந்த அந்த கும்பலின் அட்டூழியம் நீடித்து வந்துள்ளது.

Advertisement

இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் துணிச்சலாக கொடுத்த புகாரின் பேரில் இந்த விவகாரம் தற்போது வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும்நிலையில் சிபிஐக்கு பரிந்துரை செய்து அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

 

மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தும் சில வீடியோக்களும் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. நெஞ்சை உலுக்கும் படுபயங்கரமான சம்பவத்தின் அந்த வீடியோ காட்சிகள் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement

இதேபோல், இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என 3 நாட்களாக திருச்சி, கோவை, திருவண்ணாமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பொள்ளாச்சியில் ஒரு சில கல்லூரிகளுக்கு விடுமுறையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், குற்றவாளிகளுக்கு தரப்படும் தண்டனை, அனைத்து பெண்களுக்கும் தமிழக அரசின் மீது நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

மேலும் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் அந்த பெண் அலறிய குரலை நினைத்துப் பார்க்கும்போது மனம் பதறுகிறது, பயம், தவிப்பு கலந்த அந்த பெண்ணின் குரல் என் காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

வழக்கை விசாரிக்கும் எஸ்.பி பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை தவறுதலாக சொல்லிவிட்டாரா? பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது எப்படி? உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செயல்பட்ட எஸ்.பி மீது அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. பெண்ணின் பெயரில் ஆட்சியை நடத்துவதாக கூறும் ஆட்சியாளர்கள் மகளிருக்கு பாதுகாப்பு அளிக்க தவறிவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

மிஸ்டர். சீ.எம். நான் கேட்கும் கேள்வியெல்லாம் உங்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவராக கேட்க்வில்லை. இரண்டு பெண்களின் அப்பாவாக கேட்கிறேன். என்ன செய்து செஞ்ச தப்புகளுக்குப் பரிகாரம் செய்ய போறீங்க?

உங்க அம்மாவுக்கு ஏற்பட்ட அவமானத்தை எப்படி துடைக்கப்போறீங்க சாமி? இன்னும் ஏன் காத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்து கடுமையாக விமர்சித்துள்ளார் கமல்ஹாசன்.

 

Advertisement

மேலும் படிக்கபொள்ளாச்சி பாலியல் கொடூரம்: கமல் உருக்கமான வேண்டுகோள்!
 

Advertisement