தமிழக நலனுக்காக ரஜினியுடன் இணைந்து பணியாற்றத் தயார் என்று கமல் அறிவித்துள்ளார்.
ஹைலைட்ஸ்
- கமல் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
- வேலைப் பளு காரணமாக அறுவை சிகிச்சை தாமதம் ஆகியுள்ளது.
- சென்னை மருத்துவமனையில் கமலுக்கு நாளை அறுவை சிகிச்சை நடக்கிறது.
New Delhi: நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு நாளை அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது. இதையடுத்து, சில நாட்கள் ஓய்வுக்கு பின்னர் மீண்டும் கட்சி மற்றும் திரையுலக பணியில் ஈடுபடுவார் என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
கடந்த 2016-ம் ஆண்டு எதிர்பாராமல் நடந்த விபத்து காரணமாக கமல்ஹாசனின் வலது காலில் முறிவு ஏற்பட்டது. இதனை சரிசெய்ய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரது காலில் டைட்டேனியம் கம்பி பொறுத்தப்பட்டது.
அரசியல் மற்றும் சினிமாவில் கமலுக்கு இருந்த தொடர் வேலைப்பளு காரணமாக அக்கம்பியை அகற்றுவதற்கான சூழல் அமையாமல் தள்ளிப் போய்க்கொண்டிருந்தது.
மருத்துவர்களின் ஆலோசனைப்படி கமலுக்கு 22/11/2019-ம் தேதியான நாளை டைட்டேனியம் கம்பியை அகற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்பின்னர் தொடர்ச்சியாக சில நாட்கள் ஓய்வுக்குப் பின்னர் தொண்டர்களை கமல் சந்திப்பார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஒரு மாதத்திற்கு கமல் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 – திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் 2021-ல் திரைக்கு வருகிறது. இதனை தவிர்த்து தலைவன் இருக்கிறான் என்ற படத்தையும் நடித்து, தயாரித்து வருகிறார் கமல்.