நாக்கை அறுக்க வேண்டும் என்று கமலஹாசனுக்கு எதிராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்தார்.
Chennai: மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசனுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வண்ணம் பேசிய பால் மற்றும் கிராம மேம்பாட்டுத் துறை அமைச்சரான ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதிமய்யத்தின் துணைத் தலைவர் ஆர். மகேந்திரன் பொதுச் செயலாளர் அருணாசலமும் கோரிக்கை விடுத்துள்ளனர். இருவரும் சட்டம் மற்றும் மாநில நிர்வாக குழுவின் உறுப்பினராக இருந்து வருகின்றனர். திங்கள் கிழமை சென்னை காவல்துறை ஆணையரை சந்தித்துள்ளனர்.
அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி இந்து என்று கமல்ஹாசன் பேசியதற்காக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ‘நாக்கை அறுக்க வேண்டும்' என்று பேசியிருந்தார்.
கமல்ஹாசனின் பேச்சு இந்தியா முழுமையும் கடும் அதிர்வலைகளை உருவாக்கியது. இந்தியாவெங்கும் கமல்ஹாசனுக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டன. அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அவதூறு வன்முறையை தூண்டுதல், அச்சுறுத்தல் ஆகியவற்றிற்காக வழக்கை பதிவு செய்யும் படி கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்திய குற்றவியல் பிரிபு 107,120ஏ, 152ஏ, 503, மற்றும் 505 ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.