This Article is From May 15, 2019

''கமலின் பேச்சை இந்துக்களுக்கு எதிரானதாக விஷமிகள் கட்டமைத்துள்ளனர்'' : மக்கள் நீதி மய்யம்!!

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

''கமலின் பேச்சை இந்துக்களுக்கு எதிரானதாக விஷமிகள் கட்டமைத்துள்ளனர்'' : மக்கள் நீதி மய்யம்!!

கமலின் பேச்சு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி விளக்கம் அளித்திருக்கிறது.

நாடு முழுவதும் நடிகர் கமல்ஹாசனின் அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரம் விவாதப் பொருளாகவும், சர்ச்சையாகவும் மாறியுள்ள நிலையில் அதுபற்றி மக்கள் நீதி மய்யம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. கமலின் பேச்சை விஷமிகள் இந்துக்களுக்கு எதிரான கருத்தாக கட்டமைத்து விட்டனர் என்று மக்கள் நீதி மய்யம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் மோடி வரைக்கும் சென்ற நிலையில், இந்துக்கள் தீவிரவாதிகளாக இருக்க முடியாது. தீவிரவாதிகளாக இருப்பவர்கள் இந்துக்களாக இருக்க முடியாது என்று கூறியிருந்தார். 

இந்த  நிலையில் மக்கள் நீதி மய்யம் தரப்பில் கமலின் பேச்சுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-

கமலின் கருத்தினை இந்துக்களுக்கு எதிரான கருத்தாக கட்டமைத்து அதன் மூலம் தங்களின் விஷமிகள் போலி வாதத்தை பரப்பி வருகின்றனர். தீவிரவாதம் எந்த வடிவில் முன்னெடுக்கப்பட்டாலும் அது வன்மையாக கண்டிக்கத் தக்கது என்று கமல் கூறியிருந்தார். 

நியாயத்துடனும் நடுநிலையாகவும் செயல்பட வேண்டிய ஊடகங்கள், அரவக்குறிச்சியில் கமல் பேசிய முழு உரையையும் வெளியிட வேண்டும். 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
 

.