This Article is From Jun 20, 2018

கட்சியை பதிவு செய்ய டெல்லி சென்ற கமல் ராகுல் காந்தியை சந்தித்தார்

டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்திடம், கமல் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியை பதிவு செய்தார்

கட்சியை பதிவு செய்ய டெல்லி சென்ற கமல் ராகுல் காந்தியை சந்தித்தார்

ஹைலைட்ஸ்

  • ஃபிப்ரவரி 21-ம் தேதி கட்சிப் பெயரையும், சின்னத்தையும் கமல் வெளியிட்டார்
  • தேர்தல் ஆணையத்திடம் கட்சியை பதிவு செய்ய விண்ணப்பிக்கப்பட்டது
  • இன்று தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது.
டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்திடம், கமல் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியை பதிவு செய்தார். ஃபிப்ரவரி 21-ம் தேதி மதுரை பொதுக் கூட்டத்தில் கமல் தனது கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவித்தார். அதன் பின், டில்லி தலைமை தேர்தல் ஆணையத்திடம் தனது கட்சியை அங்கீகரிக்கும்படி, விண்ணப்பம் செய்திருந்தார்.

இந்த விண்ணப்பத்துக்கு ஆட்சேபம் தெரிவிப்பவர்கள் தெரிவிக்கலாம் என கால அவகாசம் தரப்பட்டது. எந்த ஆட்சேபனமும் இல்லாததால் இன்று, கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

கமல் மற்றும் அவரது கட்சியின் தலைமை நிர்வாகிகள், டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்துக்குச் சென்றனர். அங்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின், பதிவு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கமல் “கட்சி குறித்து சில கேள்விகள் கேட்க்கப்பட்டது. அதற்கு விளக்கம் அளித்தோம். அங்கீகாரத்துக்கு தேவையான ஆவணங்களைத் கொடுத்துள்ளோம். கூடிய விரைவில், பதிவு செய்யப்பட்டதற்கான அங்கீகாரம் வழங்கப்படும் என அதிகாரிகள் கூறினர்” என தெரிவித்தார்.

மேலும், டெல்லி சென்ற கமல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். இது குறித்து பேசிய கமல், இது மரியாதை நிம்த்தமான சந்திப்பு தான் என்று கூறினார். இது குறித்து ட்வீட்டிய ராகுல் காந்தி " கமல் அவர்களை சந்தித்தது, மகிழ்ச்சியளிக்கிறது. இரு கட்சிகளைப் பற்றியும், தமிழகத்தில் உள்ள அரசியல் நிலைக் குறித்தும் பேசினோம்" என்று ட்வீட்டில் கூறியிருந்தார்.
.