This Article is From Mar 21, 2020

பாஜக, ஜோதிராதித்ய சிந்தியாவை கடுமையாக விமர்சித்த கமல்நாத்!

19 வருடங்களாகக் காங்கிரஸ் கட்சியிலிருந்த ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேரும் கடந்த வாரம் பாஜக ஆளும் கர்நாடகத்திற்குத் தனி விமானம் மூலம் சென்றனர்.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக கமல்நாத் இன்று பிற்பகல் ஊடகங்களை சந்தித்தார்.

ஹைலைட்ஸ்

  • நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக ஊடகங்களை சந்தித்த கமல்நாத்
  • பாஜக, ஜோதிராதித்ய சிந்தியாவை கடுமையாக விமர்சித்தார்
  • அதிகாரப் பசியுள்ள, மகாராஜாவை பாஜக கவர்ந்துள்ளது
Bhopal:

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா கடந்த வாரம் பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர் பதவியை ராஜினாமா செய்தனர். இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் ஆட்சி கவிழ்வது உறுதியான நிலையில், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளாமல் மத்தியப் பிரதேச முதல்வர் பதவியை கமல்நாத் ராஜினாமா செய்தார். 

இதைத்தொடர்ந்து, பேசிய கமல்நாத், கோடிகளில் பணம் எப்படிச் செலவிடப்பட்டது என்பதை அனைவரும் பார்த்திருப்பீர்கள். ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எவ்வாறு வீழ்த்தப்பட்டது என்பதை அனைவரும் பார்த்திருப்பீர்கள். 

வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட அதிகாரப் பசியுள்ள, மகாராஜாவை பாஜக கவர்ந்துள்ளது என்றும், அவரால் 22 பேராசை கொண்ட எம்எல்ஏக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஜோதிராதித்தியவையும், பாஜகவையும் கமல்நாத் கடுமையாக விமர்சித்தார். 

தொடர்ந்து, அதிருப்தி எம்எல்ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் கட்சியில் இணைக்க முயன்று வந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜக மனு தாக்கல் செய்தது. இதில் இன்று மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, மூன்றாவது முறையாக பாஜகவின் சிவராஜ் சவுகான் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2018 டிசம்பரில் தான் ஆட்சி அமைத்த நாள் முதல் பாஜக சதி செய்ததாக கமல்நாத் குற்றம் சாட்டியுள்ளார். "உண்மையில் என்ன நடந்தது என்பதைக் காலம் மட்டுமே சொல்லும். அது விசாரிக்கப்படும். ஆனால் இதற்குப் பொறுப்பானவர்கள் நாளை இன்றுக்குப் பின்னும், நாளை மறுநாளோ, நாளைக்குப் பின்னோ மீண்டும் வருவார் என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும். நினைவில் கொள்ளுங்கள், அந்த நாள் நிச்சயம் வரும்" என்று அவர் கூறினார். 

மேலும், "காங்கிரஸ் அரண்மனைக்குச் செல்வதை நான் விரும்பவில்லை, அரண்மனை காங்கிரசுக்கு வர வேண்டும் என்று தான் நான் விரும்பினேன்" என்று கமல்நாத், சிந்தியா அவரது ஆதரவாளர்களால் மகாராஜா என்று அழைக்கப்படுவதைக் கடுமையாக விமர்சித்தார். 

சிந்தியா, தனது ட்வீட்டர் பதிவில் மத்தியப் பிரதேச மக்களின் வெற்றி என்றும், காங்கிரஸ் அரசு, அதன் பொது நல பாதையிலிருந்து விலகிவிட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.

19 வருடங்களாகக் காங்கிரஸ் கட்சியிலிருந்த ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேரும் கடந்த வாரம் பாஜக ஆளும் கர்நாடகத்திற்குத் தனி விமானம் மூலம் சென்றனர். தொடர்ந்து, அவர்கள் சபாநாயகருக்கு ராஜினாமா கடிதமும் அளித்தனர். 

இதையடுத்து, சபாநாயகர் ஆறு எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார். மீதமுள்ள 16 எம்எல்ஏக்களையும் தன்னை நேரில் சந்தித்து ராஜினாமாவை உறுதிப்படுத்தும் படி கேட்டுக்கொண்டார். 

காங்கிரஸ் தரப்பில் தங்களது எம்எல்ஏக்கள் கடத்தப்பட்டு விட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. மூத்த தலைவர் திக்விஜய சிங்கும், எம்எல்ஏக்களை தொடர்பு கொள்ள முயன்றதாகவும், அவர்களது ஆனால் அவரை யாரும் தொடர்பு கொள்ள முடியாது நிலை ஏற்பட்டுள்ளது என்றார். 

எனினும், அதிருப்தி எம்எல்ஏக்கள் காங்கிரஸின் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் வீடியோ வடிவில் பதில் தெரிவித்து வந்தனர். 

.