Read in English
This Article is From Nov 07, 2018

தமிழகத்தில் இடைத்தேர்தலை சந்திக்க தயார்!! - கமல் அறிவிப்பால் பரபரப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
தெற்கு Posted by (with inputs from PTI)

மக்கள் நீதி மையம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் கமல்ஹாசன் தொடங்கினார்.

Chennai:

நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் இன்று தனது 64-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்ற அறிவிப்பை கமல்ஹாசன் வெளியிட்டிருக்கிறார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ இடைத்தேர்தல் நடக்குமா அல்லது நடக்காதா என்று யாருக்கும் தெரியாது. இருந்தாலும் எப்போது நடைபெற்றாலும் இடைத்தேர்தலை சந்திப்பதற்கு நாங்கள் தயாராகி வருகிறோம்.

எனக்கு வாக்குறுதிகளை அளிப்பதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. நான் மக்களிடம் இருந்து ஆலோசனைகளை பெற விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

டிடிவி. தினகரனின் ஆதரவாளர்கள் 18 அதிமுக எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் இறுதி செய்தது. இதனை தவிர்த்து, திமுக தலைவர் கருணாநிதி மறைவின் காரணமாக அவரது திருவாரூர் சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளது.

Advertisement

இதேபோன்று அதிமுக எம்.எல்.ஏ. ஏ.கே. போஸ் மறைவின் காரணமாக திருப்பரங்குன்றம் தொகுதி காலியாக உள்ளது. இந்த 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிடவில்லை.

தமிழகத்தை பொறுத்தவரையில், திமுகவுக்கு மொத்தம் 97 எம்.எல்.ஏக்கள் (திமுக 88, காங்கிரஸ் 8, முஸ்லிம் லீக் 1) உள்ளனர். அதிமுகவுக்கு சபாநாயகர் தனபால் உள்பட மொத்தம் 116 எம்எல்ஏக்கள் உள்ளனர். தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் எம்எல்ஏவாக உள்ளார். இந்த எண்ணிக்கை 214-ஆக உள்ளது. இதனை தவிர்த்து இன்னும 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது.
 

Advertisement
Advertisement