கமலியின் தாய் சுகந்தியின், உறுதியான கருத்தியல் மற்றும் பார்வை ரெயின்போவை வெகுவாக கவர்ந்தது.
Chennai: தனியொரு தாயாக இருந்து மீன் விற்று 9 வயது மகளை ஸ்கேட்டிங்க் விளையாட்டில் நாளைய நம்பிக்கை நட்சத்திர வளர்த்தெடுத்த பிள்ளைதான் கமலி. கமலியின் வாழ்க்கை குறித்த குறிப்படம் அட்லாண்டா திரைப்பட விழாவில் விருதை பெற்றுள்ளார்.
“கமலி” சென்னைக்கு வெளியில் உள்ள கடலோர நகரமான மகாபலிபுரத்தில் படம்பிடிக்கப்பட்ட படம். கமலியின் தாய் சுகந்தி தன் மகளை வளர்க்க அனைத்து விதமான பிரச்னைகளையும் எதிர்கொண்டு போராடியுள்ளார் தாய் சுகந்தி. கமலி தன்னுடைய வாழ்க்கையில் ஸ்கேட்போர்டராக ஆகிவிடுவார் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் தாய் சுகந்தி. 34 வயதில் தன் திருமணவாழ்க்கையின் முடிவை எதிர்கொண்டார் சுகந்தி, அதன்பின் தன் மகளுக்கு நல்ல கல்வியை மட்டுமே கொடுக்க வேண்டுமென எண்ணியுள்ளார். தன் தம்பியின் நண்பர் ஒருவர் ஸ்கேட்போர்ட்டை கமலிக்கு பரிசளித்துள்ளார். ஸ்கேர்ட்போர்ட் அந்த வீட்டில் பாலின சமத்துவத்தை கட்டியெழுப்பியது.
ஆவணப் படத்தின் சாஷா ரெயின்போ நியூசிலாந்தில் பிறந்து இப்போது லண்டனில் குடியேறியவர். முதன்முதலாக இந்தியா வந்தபோது வைல்ட் பீஸ்ட்ஸில் “ஆல்பா ஃபேமிலி” என்ற பாடல் வீடியோவிற்கு கமலி மற்றும் பிற ஸ்கேட்டிங் பெண்களை ஆல்பத்திற்காக படமெடுத்துள்ளார்.
கமலியின் தாய் சுகந்தியின், உறுதியான கருத்தியல் மற்றும் பார்வை ரெயின்போவை வெகுவாக கவர்ந்தது. இந்த ஆவணப்படத்தை தயாரிக்கவும் உலகிற்கு சுகந்தியின் கதையை சொல்லவும் செய்தார்.
கமலியின் கதை இந்தியாவில் மாபெரும் மாற்றம் எப்படி ஒரு தனிநபரின் வாழ்விலிருந்து தொடங்குகிறது என்பதைக் காட்டுகிறது. கமலியின் தாய் ஒரு கதாநாயகன் தான் அவரது துணிச்சலுக்காக அவர் பாராட்டப்படவேண்டியவர் என்று நம்புகிறேன். தன்னுடைய வாழ்க்கை தனக்கானது என்று சொல்வதற்கு ஸ்கேட்டிங்க்போர்ட் ஓர் அடையாளமாகி விட்டது என்று இயக்குநர் ரெயின்போ கூறினார்.
சுகந்தி ரெடிமேட் மீன் மசாலவை தயாரித்து கடற்கரையோரம் விற்று வருகிறார். அதன் மூலம் தன் மகளின் வாழ்வை மாற்றிக் காட்டியுள்ளார்.
தன்னுடைய வாழ்க்கை கதை படமானது அதன் வெற்றிக் குறித்தும் சுகந்தியிடம் பேசியபோது, என் பெற்றோரும் உள்ளூர் சமூகமும் ஒப்புக் கொள்ளவில்லை. கமலியின் கைகால்களை உடைக்கவே நான் வேலை செய்வதாக சொன்னார்கள். கமலி நான் தொடாத தூரங்களை அவள் தொடவேண்டும் என்று நான் விரும்புகிறேன். சின்ன வட்டத்துக்குள் அவள் நின்றுவிடக் கூடாது என்று கூறினார்.
கமலி இணைய உலகத்திற்கு வைரலாக அறிமுகம் ஆனவர். சென்னையைச் சேர்ந்த ஐரிஸ் தொழிலதிபர் அயின் எட்வர்ட் சர்வதேச ஸ்கேட்போர்ட்டர் ஜாமி தாமஸுடன் இணைந்து பயிற்சி கொடுக்கும் போஸ்டர் ஒன்று வெளியாகியிருந்தது. மற்றொரு தொழில்முறை ஸ்கேட்டர் டோனி ஹவாக் இதை பகிர்ந்து கொள்ளவும் செய்தது சமூக வலைதளங்களில் வைரலானது.
அயின் எட்வர்ட் “ ரெயின்போ இங்கு ஸ்கேட்டிங்க் பழகுவதற்கு ஏற்ற வகையில் மகாபலிபுரத்தில் ஒரு பார்க்க அமைக்க வேண்டுமென விரும்புகிறார். இதனால் ஒரு சமுதாய குழுவில் அனைத்து குழந்தைகளும் ஸ்கேட்டிங்க் விளையாட்டினை விரும்பி அதல் பலரும் கற்றுக் கொள்வார்கள்” என்று தெரிவித்தார்.
கமலி தற்போது 5 வகுப்பு படித்து வருகிறார். “ஸ்கேட்டிங்க்போர்ட் விளையாட்டில் சாதனை செய்யவே பெரிது விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.
இந்தப் படம் 2020 ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு தகுதிபெற்றது. மகாபலிபுர மக்கள் பலரும் ஆஸ்கார் விருதினை பெறும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.