Read in English
This Article is From Oct 19, 2019

இந்து அமைப்பின் நிறுவனர் கழுத்தை அறுத்துக் கொலை! சிசிடிவியில் சிக்கிய கொலையாளிகள்!!

கமலேஷ் திவாரி (43), வெள்ளிக்கிழமை பிற்பகல் லக்னோவின் நாகா பகுதியில் உள்ள அவரது வீட்டில் மூன்று சந்தேக நபர்களால் கொல்லப்பட்டுள்ளார்.

Advertisement
இந்தியா Edited by (with inputs from ANI)
Lucknow:

உத்தரப்பிரதேசத்தில் செயல்பட்டு வரும் இந்து அமைப்பான ஹிந்து சமாஜ் கட்சியின் நிறுவனர் கமலேஷ் திவாரி கழுத்து அறுக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கமலேஷ் வீட்டின் வெளியே உள்ள சிசிடிவி வீடியோவை ஆய்வு செய்ததில் அதிலுள்ள இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 3 பேர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

அவர்களது கையில் ஸ்வீட் கவர்களுடன் வீட்டிற்குள் செல்கின்றனர். அவர்கள் தீபாவளிக்கு இனிப்புகள் வழங்க செல்வதாக கூறி வீட்டிற்குள் சென்றிருக்க வேண்டும் என்றும் ஸ்வீட் பைகளுக்குள் ஆயுதங்களை மறைத்து வைத்து எடுத்து சென்றிருக்க வேண்டும் என்றும் போலீசார் சந்தேகித்துள்ளனர். 

அதில், ஒருவர் காவி நிற குர்தாவும், மற்றொருவர் சிவப்பு நிற குர்தாவும் அணிந்துள்ளனர். அந்த பெண் சிவப்பு நிற குர்தா அணிந்து வெள்ளை நிற துப்பட்டாவுடன் உள்ளார். 

Advertisement

மேலும், இந்த கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சந்தேகிக்கப்படும் அந்த நபர்கள் யார் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Kamlesh Tiwari murder: உத்தரபிரேதச போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடிக்க 10 தனிப்படைகள் அமைத்துள்ளனர்.


உத்தரப்பிரதேசத்தில் இந்து சமாஜ் கட்சியை கடந்த 2015-ல் கமலேஷ் திவாரி தொடங்கினார். தனது சர்ச்சை மிகுந்த பேச்சுக்களால் மாநிலம் முழுவதும் அவர் பரபரப்பாக பேசப்பட்டு வந்தார்.

பல்வேறு வழக்குகளில் சிக்கிய அவரை, போலீசார் தேசப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனை எதிர்த்து அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் அவரை வழக்கில் இருந்து விடுவித்தது. 

Advertisement

இந்த நிலையில் லக்னோவில் உள்ள அவரது வீட்டில் நேற்று மதியம் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேரில் பார்த்த சாட்சியங்களின் அடிப்படையில் 2 பேர் அவரை சந்தித்து பேசியுள்ளனர். ஒருவர் காவித்துண்டு அணிந்திருக்கிறார். இன்னொருவர் தீபாவளி இனிப்புகளை கமலேஷிடன் வழங்கி பேசிக் கொண்டிருக்கிறார். 

சிறிது நேரத்திற்கு பின்னர், கமலேஷின் கழுத்தை அறுத்த இருவரும், அவரை பலமுறை துப்பாக்கியால் சுட்டனர். இதன்பின்னர் அவர்கள் தப்பியோடி விட்டனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த கமலேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

Advertisement

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச காவல்துறை தலைவர் ஓ.பி.சிங் தெரிவித்துள்ளார். முதல்கட்ட தகவலின் அடிப்படையில் கொலை செய்தவர்கள் கமலேசுக்கு தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர்.

ஏனென்றால் கொலை செய்வதற்கு முன்பாக கமலேசுடன் குற்றவாளிகள் 36 நிமிடங்கள் பேசியுள்ளனர். குற்றவாளிகளை போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது. 

Advertisement

With input from ANI

Advertisement