This Article is From Mar 22, 2020

விமான நிலைய சோதனையில் வைரஸ் தென்படாதது ஏன்? கேள்வி எழுப்பும் பாடகி விவகாரம்!

இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 188, 269, 270 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் மார்ச்.14ம் தேதியன்று அன்று லக்னோ விமான நிலையத்தில் பாடகியை சோதனை செய்தபோது, அவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது" என்று கூறுகிறது.

Coronavirus India: பாடகி கனிகா கபூர் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக நேற்றைய தினம் தெரிவித்தார்.

ஹைலைட்ஸ்

  • விமான நிலைய சோதனையில் வைரஸ் தென்படாதது ஏன்?
  • பாடகி கனிகா கபூருக்கு கொரோனா பாதிப்பு
  • வீட்டு தனிமைப்படுத்தல் அறிவுறுத்தலை புறக்கணித்ததாக தெரிகிறது
Lucknow:

பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக நேற்றைய தினம் தனது சமூகவலைத்தளங்களில், தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, அவர் மீது அலட்சியம் மற்றும் ஒத்துழையாமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

லக்னோவில் அவர் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டதால், அந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பல்வேறு மூத்த அரசியல்வாதிகள் மத்தியிலும் தற்போது இது பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் அனைவரும் ஜனாதிபதி இல்லத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் சென்று வந்துள்ளனர். 

மார்ச்.14ம் தேதியன்று அன்று லக்னோ விமான நிலையத்தில் பாடகியைச் சோதனை செய்தபோது, அவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது" என்று கூறுகிறது. எனினும், அவரை வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கும் படி அறிவுறுத்தியதாகவும் எனினும், அதனை அவர் புறக்கணித்ததாகவும் தெரிகிறது. 

இதுதொடர்பாக கனிகா கபூர் கூறும்போது, மார்ச்.11ம் தேதி அன்று தான் லக்னோவிற்கு வந்ததாகக் கூறியுள்ளார். லண்டனிலிருந்து மார்ச் 9ம் தேதி மும்பை விமான நிலையத்திற்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். கடந்த மாதத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகக் காணப்பட்ட நாடுகளின் பட்டியலில் லண்டனும் ஒன்றாகும். 

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் கூறும்போது, விமான நிலையங்களில் அவர் சோதனை செய்ததாகவும், அப்போது அவருக்கு எந்த பாதிப்பும் தென்படவில்லை என்றும் அதனால் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவில்லை என்று அவர் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக உத்தரப் பிரதேச சுகாதாரத்துறை அமைச்சர் ஜெய் பிரதாப்சிங் கனிகா சிங் கலந்து கொண்ட அந்த விருந்தில் இவரும் பங்கேற்றுள்ளார். அவர் கூறும்போது மாநில தலைநகரில் உள்ள விமானநிலையத்தில் சில குறைபாடுகள் உள்ளதை அவர் ஒப்புக்கொண்டார். 

தொடர்ந்து, அவர் கூறும்போது, எங்கள் தரப்பில் குறைபாடு இருப்பது தெரிகிறது. கனிகா கபூர் எவ்வாறு விமான நிலையத்திலிருந்து வெளியேறினார் என்பது குறித்து எனது அதிகாரிகளிடம் கேள்வி எழுப்ப உள்ளேன் என்று அவர் கூறினார். 

தொடர்ந்து, அமைச்சர் ஜெய் பிரதாப்சிங்கும் தற்போது, சுய தனிமைப்படுத்தலில் உள்ளார். கடந்த மார்ச்.14ம் தேதி நடந்த விருந்த நிகழ்ச்சியில் எனது குடும்பத்துடன் சென்றிருந்தேன். இதேபோல், லக்னோ மற்றும் டெல்லியிலிருந்து பலரும் தங்களது குடும்பத்தினருடன் வருகை தந்திருந்தனர். அங்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாக இருந்துவிட்டே சென்றேன் என்று அவர் கூறியுள்ளார். 

நேற்றைய தினம் 41 வயதான பாடகி தனது சமூகவலைத்தளத்தில் தனக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது தான் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். இந்த பதிவைத் தொடர்ந்து பாஜக தலைவர் வசுந்தரா ராஜே ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில், ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும் அவரது மகன் துஷ்யந்த் சிங்கும் சுய தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். 

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை துஷ்யந்த் சிங் சந்தித்துள்ளார். இதனால், அரசு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகக் குடியரசுத்தலைவரும் தனது நியமனங்கள் அனைத்தையும் ரத்து செய்துள்ளார்.

இதற்கிடையே, உத்தரப் பிரதேச அரசு, மாநில தலைநகருக்குப் பாடகி கனிகா கபூர் வந்ததிலிருந்து கடந்த ஒரு வாரத்தில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள், சந்திப்புகள் குறித்து விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க மக்கள் ஊரடங்குக்குப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ள நிலையில், இதுபோன்ற பெரும் கூட்டமாக விருந்து நிகழ்ச்சிகளில் மூத்த அரசியல்வாதிகள் கலந்துகொண்டது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

முதன்முதலாகச் சீனாவின் வுஹான் பகுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்பு, தற்போது 143க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. உலகம் முழுவதும், 8,000க்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர், 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, இந்தியாவில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 230 ஆக அதிகரித்து வருகிறது. 

.