This Article is From Feb 05, 2019

மம்தாவை நேரில் சந்தித்து கனிமொழி ஆதரவு - தர்ணாவில் பங்கேற்றார்

சிபிஐ விசாரணை விவகாரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்க்கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
இந்தியா Posted by

தர்ணாவில் பங்கேற்றுப் பேசும் கனிமொழி

Highlights

  • மம்தாவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்திருந்தார்
  • மம்தாவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார் கனிமொழி
  • சிபிஐ விசாரணை தொடர்பாக மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்துகிறார் மம்தா

சிபிஐ விசாரணை விவகாரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்து திமுக மகளிரணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி ஆதரவு தெரிவித்தார். 

பொன்ஸி ஊழல் விவகாரம் தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷ்னர் ராஜீவ் குமாரை விசாரிக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த விவகாரத்தில் ராஜீவை விசாரிக்க வந்த சிபிஐ அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். 

அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டதை உச்ச நீதிமன்றத்திற்கு சிபிஐ கொண்டு சென்றுள்ளது. இதற்கிடையே, மத்திய அரசு சிபிஐ-யை தேர்தல் எந்திரமாக பயன்படுத்துகிறது என்று கூறி எதிர்க்கட்சிகள் மம்தா பானர்ஜிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. 

இந்த நிலையில் திமுக மகளிரணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார். மம்தா நடத்தி வரும் தர்ணா போராட்டத்திலும் கனிமொழி பங்கேற்றார். 
 

Advertisement
Advertisement