This Article is From Nov 18, 2019

“இன்னும் FIR கூட போடல…”- IIT விவகாரம் பற்றி நாடாளுமன்றத்தில் கர்ஜித்த கனிமொழி!

Kanimozhi on IIT Madras issue - “கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் நாட்டில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் 52 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளார்கள்"

“இன்னும் FIR கூட போடல…”- IIT விவகாரம் பற்றி நாடாளுமன்றத்தில் கர்ஜித்த கனிமொழி!

Kanimozhi on IIT Madras issue - "யாரைக் காப்பாற்றப் பார்க்கிறது இந்த அரசு"

IIT Madras - சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகமான ஐஐடி மெட்ராஸில் (IIT Madras) பயின்று வந்த மாணவி பாத்திமா, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த சென்னை மாநகரப் போலீஸ் (Chennai Police), சிசிபி-க்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டுள்ளனர். தொடர்ந்து இந்த வழக்கு பற்றிய விசாரணை நடந்து வரும் நிலையில், இது குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார் திமுக எம்.பி., கனிமொழி (Kanimozhi).

“கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் நாட்டில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் 52 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளார்கள். சென்னையில் உள்ள ஐஐடி-யில் ஒரு மாணவி சமீபத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அந்த மாணவி, தன் மரணத்திற்கு யார் காரணம் என்று தெளிவாக குறிப்பு மூலம் தெரிவித்துள்ளார். ஆனால், இதுவரை அது தொடர்பாக ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. அந்த மாணவி, யாரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளாரோ, அவருக்கு எதிராக அரசு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஒரு எப்ஐஆர் கூட போடப்படவில்லை. யாரைக் காப்பாற்றப் பார்க்கிறது இந்த அரசு. 

இப்படி நான் பேசுவதால், நாட்டின் உயரிய கல்வி நிறுவனமான ஐஐடி-யின் பெயர் சிதைக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. தொடர்ந்து ஐஐடி-களில் காட்டப்பட்டு வரும் ஒதுக்கதல்களால், மாணவர்கள் தற்கொலை செய்யப் போகிறார்கள் என்றால், அந்த கல்வி நிறுவனம் அப்படி செயல்பட அனுமதிக்கக் கூடாது.  உயர் கல்வி நிறுவனங்கள் பாரபட்சம் காட்டும் இடமாக இருக்கவே கூடாது. நாம் கல்வியென்று இளம் தலைமுறைக்கு எதைக் கற்றுத் தருகிறோம்,” எனக் கொதிப்புடன் பேசினார் கனிமொழி.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பாத்திமாவின் தந்தை லத்தீஃப், “ஐஐடி நிர்வாகம் சார்பில் இதுவரை எங்களிடம் யாரும் பேசவில்லை. இந்த நாட்டில் இனியொரு பாத்திமா இப்படி இறக்கக் கூடாது. இனி ஒரு பெண்ணுக்கு அநீதி நிகழக்கூடாது. என் மகள் தொடர்பான விஷயத்தில் உண்மையைக் கொண்டு வர தமிழக ஊடகங்கள் எங்களுக்குத் துணை நிற்க வேண்டும். தமிழக போலீஸ் மீதும் அரசு மீதும் நாங்கள் நம்பிக்கை வைக்கிறோம்,” என்று உணர்ச்சிப் பெருக்கில் பேசினார். 

.