This Article is From Apr 09, 2019

ஐ.ஏ.எஸ். தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தது எப்படி? -கனிஷக் சிறப்பு பேட்டி!!

என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெறுவேன் நம்பியதாகவும், ஆனால் அகில இந்திய அளவில் முதலிடம் பெறுவேன் என எண்ணிப் பார்க்கவில்லை என்றும் கனிஷக் கூறியுள்ளார்.

ஐ.ஏ.எஸ். தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தது எப்படி? -கனிஷக் சிறப்பு பேட்டி!!

கடின உழைப்பே வெற்றிக்கு காரணம் என்று கனிஷக் கூறியுள்ளார்.

New Delhi:

ஐ.ஏ.எஸ். தேர்வில் அகில இந்திய அளவில் கனிஷக் கடாரியா முதலிடம் பிடித்துள்ளார். வெற்றி பெற்றது குறித்து என்.டி.டி.வி.க்கு அவர் சிறப்பு பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியதாவது-

கம்ப்யூட்டர் சைன்ஸ் பிரிவில் பி.டெக் படிப்பை ஐஐடி பாம்பேயில் முடித்தேன். அதன்பின்னர் தென் கொரியாவில் நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்ந்தேன். எனக்கு எப்போது வெளிநாடுகளில் இருப்பதுதான் எனக்கு விருப்பம். 

தென்கொரியாவில் இருந்தபோது நான் நன்றாக சம்பாதித்தேன். ஆனால் எனது சொந்த நாட்டு மக்களுக்காக எதுவும் செய்ய முடியவில்லை என்கிற வருத்தம் எனக்கு இருந்தது. எனவே ஓராண்டு தென் கொரிய பணிக்கு பின்னர் நான் இந்தியா திரும்பினேன். 

2 ஆண்டுக்கு முன்பே செய்தித் தாள்களை வாசிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறேன். நடப்பு நிகழ்வு பகுதிக்காக ஆன்லைனில் முக்கிய தகவல்களை படித்தேன்.

ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு ஆரம்ப கட்டத்தில் பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல நேர்ந்தது. முதல் நிலை தேர்வான ப்ரிலிமினரியை பொறுத்தளவில் கடந்த ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் டெஸ்ட் சீரிஸை செய்து பார்த்தேன். 

கணிதம் எனது விருப்ப பாடம். மற்ற விருப்ப பாடங்களின் பாடத்திட்டத்தை விட கணிதத்தின் பகுதி அதிகமாக இருக்கும். ப்ரிலிமினரி தேர்வான பின்னர் ஒரு நாளைக்கு 13-14 மணி நேரம் மெய்ன்ஸ் தேர்வுக்காக செலவிட்டேன். தேர்வுக்கு 2 மாதங்களுக்கு முன்பாக சோஷியல் மீடியா உபயோகத்தை நிறுத்தி விட்டேன். 

ஃபேஸ்புக், ட்விட்டர் அக்கவுண்டுகளை டிலிட் செய்துவிட்டேன். இன்ஸ்டாகிராமை மட்டும் மிகவும் குறைவாக உபயோகித்தேன். வாட்ஸப்பில் தேர்வுக்காக 2 குருப்கள் இருந்தன. அவற்றின் மூலம் தேர்வு திட்டங்களை வகுத்தேன். முடிவுகளைப் பற்றி நான் ஒருபோதும் கவலை கொள்ளவில்லை.

என்னுடைய தந்தை மற்றும் மாமா ஆகியோர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். தந்தை ராஜஸ்தானை சேர்ந்த ஐ.ஏ.எஸ்.  அதிகாரி. வெற்றியை பொறுத்தளவில் கடின உழைப்பும், நேர்மறையான எண்ணமும் அவசியம். நான் வெற்றி பெற்றதற்கு காரணமும் அதுதான். 

இவ்வாறு அவர் கூறினார்.

.