This Article is From Dec 10, 2018

கேரளாவின் 4வது சர்வதேச விமான நிலையம் திறப்பு

கண்ணூர் சர்வதேச விமான நிலையமானது, ஒரே நேரத்தில் 2000 பயணிகளை கையளும் வகையிலும், ஆண்டுக்கு 15 லட்சம் பயணிகள் வரை சேவை அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் 4வது சர்வதேச விமான நிலையம் திறப்பு

சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில், ரூ.1800 கோடி செலவில் கண்ணூர் விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.

Kannur:

கேரள மாநிலம் கண்ணூரில் சர்வதேச விமான நிலையத்தை மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, முதல்வர் பினராயி விஜயன் திறந்து வைத்தனர். இதன் மூலம் 4 சர்வதேச விமான நிலையம் கொண்ட ஒரே மாநிலமாக கேரளம் விளங்குகிறது.

சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில், ரூ.1800 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கண்ணூர் விமான நிலையத்தில், ஒரே நேரத்தில் 2000 பயணிகளை கையளும் வகையிலும், ஆண்டுக்கு 15 லட்சம் பயணிகள் வரை சேவை அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தின் ஓடுபாதை நீளமானது 3,050 மீட்டராகும், இதனை 4,000 மீட்டராக நீட்டிக்கப்படும் வசதியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

fu66s998

இந்த விமான நிலையத்தில் இருந்து முதல் விமானமாக, 180 பயணிகளை கொண்டு அபுதாபி செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை சிறப்பு விருந்தினர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

சர்வதேச விமான நிலையமான கண்ணூர் விமான நிலையத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் கட்டார் உள்ளிட்ட நாடுகளுக்கும் செல்லலாம். இந்த விமான நிலையம் ஹைதராபாத், பெங்களூரு மற்றும் மும்பை ஆகிய இடங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
 

1koca32g


ஏற்கனவே கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. இன்று நடந்த நிகழ்ச்சியை காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க புறக்கணித்ததால் இந்த பெரும் விழாவும் சர்ச்சைக்குள்ளானது.
 

.