ஹைலைட்ஸ்
- கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை புகழ்பெற்ற சுற்றுலாத்தளம்
- இதற்கு முன் அங்கு செல்ல படகு கட்டணம் 34 ரூபாய்
- பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக 50 ரூபாய் ஆகியுள்ளது
சமீபத்தில் ஏற்பட்டுள்ள அதிக டீசல் விலை ஏற்றம் காரணமாக, கன்னியாகுமரியில் இருக்கும் புகழ் பெற்ற திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள், கூடுதல் பயன்படகு சேவை கட்டணம் செலுத்த வேண்டும்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றத்தின் காரணமாக, வசூலிக்கப்பட்டு வந்த சாதரண கட்டணம் 34 ரூபாயில் இருந்து 50 ரூபாயாகவும், சிறப்பு கட்டணம் 169 ரூபாயிலிருந்து 200 ரூபாயாகவும் பெறப்படுகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலை, தமிழ் புலவர், தத்துவ மேதை மற்றும் உலகப் புகழ்பெற்ற திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரின் சிலை ஆகும். கன்னியாகுமரியில் இருந்து கடலோரமாக 400 மீட்டர் தொலைவில் உள்ளது.
இந்திய தத்துவ மேதை மற்றும் ஆன்மீக தலைவர் சுவாமி விவேகானந்தரின் நினைவிடமாக கன்னியாகுமரியில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது விவேகானந்தர் பாறை நினைவிடம்.
(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)