சென்னை வேளச்சேரியின் பீனிக்ஸ் மார்கெட்சிட்டி ஷாப்பிங் மாலில் நடைபெற்ற ஒரு நிகழ்வில்தான் இந்த கின்னஸ் சாதனை (Guinness World Records) நிகழ்த்தப்பட்டுள்ளது. கின்னஸ் உலக சாதனையில் மிகப்பெரிய கிரிக்கெட் பேட் என்ற பட்டத்திற்காகவே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி கடந்த ஜூன் 14 அன்று மாலை 6:30 மணிக்கு நடைபெற்ற இந்த நிகழ்வில், கபில் தேவ் இந்த 50 அடி கிரிக்கெட் பேட்டை அறிமுகம் செய்து வைத்தார்.
பீனிக்ஸ் மார்கெட்சிட்டி (PHOENIX MARKETCITY) மற்றும் பல்லடியம் (PALLADIUM) இணைந்து நடத்திய இந்த நிகழ்வில், கின்னஸ் சாதனைக்கான 50-அடி நீளம் கொண்ட மிகப்பெரிய கிரிக்கெட் பேட்டை உலகக்கோப்பை வெற்றி கேப்டனான கபில் தேவ் (Kapil Dev) அறிமுகம் செய்தார். இந்த அறிமுகம் கின்னஸ் உலக சாதனைகளின் அதிகாரப்பூர்வ நீதிபதியான ஸ்வப்னில் டங்கரிகர் (Swapnil Dangarikar) முன்னிலயில் நடைபெற்றது.
இந்த பேட் உலகின் மிகப்பெரிய பேட் என்ற பட்டத்துடன் கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றது. 50 அடி நீளம் கொண்ட இந்த கிரிக்கெட் பேட், வில்லோ மரத்தினால் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) கிரிக்கெட் பேட்டிற்கான தரநிலைகளை கொண்டே இந்த கிரிக்கெட் பேட் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.